Skip to main content

1000 ஏக்கரில் வாழைப்பயிர் சேதம்; இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வு செய்த அமைச்சர்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

 minister went on a two-wheeler and inspected the banana trees that had fallen due to the typhoon

 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை வீசிய திடீர் சூறைக்காற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை வீசிய திடீர் சூறைக்காற்று மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராமாபுரம், ஒதியடி குப்பம், கீரப்பாளையம், காட்டுமன்னார்கோயில் வழி சோதனை பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பூவன், ஏலக்கி, மொந்தன், பேயன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒட்டுமொத்த முதலீட்டையும் இழந்து கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

 

சூறைக்காற்றில் சேதமடைந்த வாழைப்பயிர்கள் அனைத்தும் வரும் ஆடி மாதத்தில் அறுவடை செய்யும் நோக்கத்துடன் சாகுபடி செய்யப்பட்டவை ஆகும். அவை அனைத்தும் குலை தள்ளி அடுத்த மாதத்தில் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தன. ஆயிரம் ஏக்கரில் சுமார் 5 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து விட்டன. அவற்றுக்காக செய்யப்பட்ட முதலீடு அனைத்தும் வீணாகி விட்டது என்று வேதனையுடன் விவரிக்கும் விவசாயிகள் சேதமடைந்த வாழைப் பயிர்களின் மதிப்பு மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகம் என்று கூறுகின்றனர்.

 

ஜூன் மாதத்தில் இப்படி ஒரு சூறைக்காற்று வீசும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே வீசிய சூறைக்காற்றில் 1000 ஏக்கரில் வாழைப்பயிர்கள் நாசமாகும் என்பதையும் எவரும் எதிர்பார்க்கவில்லை. திட்டமிட்டபடி அறுவடை நடந்தால் சாகுபடிக்காக வாங்கிய கடன்களை அடைத்து விட்டு லாபம் ஈட்டலாம் என்று நேற்று வரை நினைத்துக் கொண்டிருந்த எங்கள் கனவில் மண் விழுந்து விட்டது. இப்போது லட்சக்கணக்கில் வாங்கிய கடன்களை எவ்வாறு அடைக்கப்போகிறோம் என்ற கவலையில் உள்ளனர் விவசாயிகள். அவர்களின் கவலையைப் போக்கி கண்ணீரைத் துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. 

 

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைப்பயிர்களை அதிகாரிகள் குழுவை அனுப்பி கணக்கீடு செய்ய தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள். சாகுபடிக்காக செய்த  மனித உழைப்பு தவிர்த்த பிற செலவை மட்டுமாவது ஈடுகட்டும் வகையில் ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த நிலையில் நேற்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உடன் சென்று சேதமடைந்த வாழைப்பயிர்களை பார்வையிட்டனர். வாழை பயிரிட்ட விவசாயிகளின் நிலைமை அறிந்த அமைச்சர் அது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண்பதாக விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வடலூரில் டெங்கு காய்ச்சலால் பெண் உயிரிழப்பு? போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

வடலூர் அருகே தென்குத்து புதுநகர், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி வெண்ணிலா என்கின்ற குமாரி(30); மணிகண்டன் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி குமாரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வடலூரில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 7 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். தென்குத்து கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள கல்லுக்குழி மணல் குவாரியில், வடலூர் நகராட்சி குப்பை கொட்டப்படுவதால் ஏராளமானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குமாரியும் டெங்கு காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி  குப்பை கொட்டப்படும் கல்லுக்குழி மண் குவாரி பகுதியில் திரண்டனர்.

Villagers struggle in Vadalur after a woman passed away of dengue fever

அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதனை கிராம மக்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர் வடலூர் நகராட்சி குப்பை இங்கு கொட்டப்படுவதால்தான் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலமுறை குப்பை கொட்ட கூடாது எனக் கூறியும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து இங்க குப்பைகளை கொட்டி வருகிறது. அதனால் அங்கு சென்று கேட்போம் எனக்கூறி அவர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் வடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அங்கு பேச்சு வார்த்தைக்கு வந்த வடலூர் சேர்மன் சிவக்குமாரை முற்றுகையிட்டு அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி சேர்மன் சிவகுமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வடலூர் நகராட்சி தலைவர் சிவக்குமாரை கேட்டபோது அந்த பெண் இறந்ததுக்கும் குப்பை கொட்டியதுக்கும் சம்பந்தம் இல்லை. பல இடங்களில் டெங்கு உள்ளது. ஆனால் அந்த பெண் இறந்தது டெங்குவால் இல்லை, இனிமேல்தான் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் எனக்கூறினார். இதுகுறித்து மருத்துவத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அந்த பெண் டெங்குவால் தான் இறந்துள்ளாரா? என சரியான விளக்கத்தை கூறினால் தான் மக்கள் மத்தியில் டெங்கு குறித்த அச்சம் போகும் எனக் கூறப்படுகிறது. 

Next Story

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
cm stalin announced that relief of Rs.6 thousand will be given to the affected people

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு இழப்பீடு தொகையாக ஏற்கனவே வழங்கி வந்த ரூ. 5 ஆயிரத்திலிருந்து தற்போது ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்; நெற்பயிர் பாதிப்புகளுக்கான இழப்பீடு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.