Skip to main content

“எனக்கு வராத தகவல் உங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது?” - அமைச்சர் உதயநிதி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

Minister Udayanidhi Stalin met the media today

 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் 400 பேர் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார்.

 

இதன் பின் அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதல் முறையாக கேலோ ஒலிம்பியாட் போட்டி அடுத்தாண்டு நடைபெற உள்ளது. நேற்று சாய்-இல் (SAI - Sports Authority of India) இருந்து அதிகரிகள் ஆய்வுக்காக வந்திருந்தார்கள். அடுத்த வாரம் மீண்டும் அதிகாரிகள் வர இருக்கிறார்கள். இங்கிருக்கும் வசதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு இந்த வாய்ப்பை வழங்கிய விளையாட்டுத் துறை அமைச்சருக்கும் மத்திய அரசுக்கும் நன்றிகள். செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியது போல் ஹாக்கி ஆசியக் கோப்பையையும் நடத்த இருக்கிறோம். அதற்கான பணிகளும் நடந்த வண்ணம் உள்ளது. அதுபோல் கேலோ இந்தியாவும் நல்ல முறையில் நடக்கும்.

 

பிரதமர் கேலோ இந்தியாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். நாங்களும் கண்டிப்பாக அழைப்போம். தமிழ்நாட்டில் எந்தெந்தப் பகுதிகளில் நடத்தலாம் என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள். சென்னையில் மட்டும் நடத்தலாமா அல்லது மதுரை, கோவை என மூன்று, நான்கு இடங்களில் நடத்தலாமா என்று ஆய்வு செய்கிறார்கள். முதற்கட்ட பேச்சுவார்த்தை நேற்று தான் நடந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகளின் மூலம் அது முடிவு செய்யப்படும்” என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர், “அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த உதயநிதி, “தகவல் எங்கிருந்து வந்தது. எனக்கு வராத தகவல் உங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தது. எங்கிருந்து இந்த தகவல் வந்தது என தெரியவில்லை. நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள் என்றும் தெரியவில்லை” என தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘மக்களைக் குழப்பும் புதிய கிரிமினல் சட்டங்கள்’ - உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws that confuse people High Court opinion

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

New laws that confuse people High Court opinion

இதனையடுத்து புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.  இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “அமலுக்கு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்தும் முன் சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் இது குறித்து மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள்; உயர் நீதிமன்றத்தை நாடிய திமுக!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
New laws brought into force DMK appealed to the High Court

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். 

New laws brought into force DMK appealed to the High Court

இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (19.07.2024) விசாரணைக்கு வர உள்ளது.