Skip to main content

“வீட்டுச் சுவரை ஏறிக் குதித்து உள்ளே சென்றுள்ளனர்..” - அமைச்சர் செந்தில் பாலாஜி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Minister senthil balaji addressed press

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர், “இந்த சோதனை என்பது எங்களுக்கு புதியது அல்ல. ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது இதுபோன்று வருமான வரித்துறை சோதனையை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். தற்போது எனது இல்லம் தவிர என் சகோதரர் இல்லம், அவருக்கு தொடர்புடையோர் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று சோதனை நடந்துகொண்டிருக்கும் இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் வருமான வரியை சரியாக கட்டி வருபவர்கள். குறிப்பாக விரும்பத்தகாத நிகழ்வு நடந்தவுடனேயே நிர்வாகிகளை தொடர்புகொண்டு, சோதனை நடைபெறும் இடத்தில் யாரும் இருக்கக்கூடாது. சோதனைக்கு முழுமையாக ஒத்துழையுங்கள் என்று தெரிவித்துள்ளேன்.

 

அதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்து அனைவரும் கிளம்பிச் சென்றுள்ளனர். அவர்கள் என்ன ஆவணம் கேட்டாலும் தருவதற்கு தயாராக உள்ளோம். எத்தனை நாட்கள் நடந்தாலும், முழுமையான ஒத்துழைப்பு தரவும் தயாராக இருக்கிறார்கள். தம்பி மட்டும் வீட்டில் இல்லை. அவரது வீட்டில் ஆள் இருக்கிறார்கள். வருமான வரித்துறை சோதனைக்கு சென்றவர்கள் அதிகாலை சென்றுள்ளனர். பெல் அடித்து கதவை திறக்க சற்று நேரம் கூட பொறுத்திருக்காமல் வீட்டின் சுவரை ஏறி குதித்து அதிகாரிகள் உள்ளே சென்றுள்ளனர். அந்த வீடியோ எனக்கு வந்திருக்கிறது.

 

எனக்கு வந்த தகவலின்படி 40 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. முறையான தகவல் தரவில்லை என எங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை சோதனையில் ஏதாவது தவறு கண்டறியப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கட்டும். மாறாக சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா. 2006ல் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் நின்றபோது என்ன சொத்து விவரங்களை தாக்கல் செய்தேனோ, அதில் ஒரு சொத்தை தற்போது விற்பனை செய்துள்ளேன். 2006 முதல் இன்றுவரை நானோ, என் சகோதரரோ, தாயோ, தந்தையோ யாருடைய பெயரிலும் ஒரு சொத்தைக் கூட வாங்கவில்லை. இனியும் வாங்கமாட்டோம்.

 

சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியே வந்தது. அதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் தம்பி மனைவியின் தாய் அவரது மகளுக்கு ஒரு இடத்தை தானமாக கொடுக்கிறார். அந்த இடத்தில் தான் வீடு கட்டுவதாக சொல்லப்படுகிறது. அவர் தனது மகளுக்கு சொத்தை தருவதில் என்ன தவறு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கோவிலில் யாகம் வளர்த்த பக்தர்கள்; விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Devotees who raised sacrifices in the temple; Banished bees

கரூர் மாவட்டம் அருகே உள்ளது நெரூர் பகுதி இந்தப் பகுதியில் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் இந்தக் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக கும்பகோணத்தில் இருந்து ஆறு பக்தர்கள் அந்தக் கோவிலுக்கு வந்துள்ளனர். இதனால் கோவிலில் யாகம் செய்து பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்காக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. தீயில் உருவான புகை கோயில் முழுக்க பரவியது. அப்பொழுது கோவில் வளாகத்திலேயே இருந்த மரத்தில் தேன்கூடு ஒன்று இருந்தது. அதிகப்படியான புகையால் தேன் கூட்டில் உள்ள தேனீக்கள் கிளம்பின.

கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரையும் தேனீக்கள் கொட்ட தொடங்கியது. உடனடியாக அனைவரும் கோவிலுக்கு உள்ளேயே ஒளிந்து கொண்டனர். தொடர்ந்து கரூர் தீயணைப்பு துறை எனக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உடை, முக கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு உள்ளே சென்று பக்தர்களை சலனமில்லாமல் ஒவ்வொருவராக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அனைவரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். யாகம் வளர்த்த புகையால் தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் கிளம்பி, கொட்டிய சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்!

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Demonstration demanding the passing of the Lawyer Protection Act

கரூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்த வேண்டும், இந்தி திணிப்பை தடுக்க வேண்டும், குற்றவியல் சட்ட மாற்றங்களைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.