Skip to main content

சமய மாநாடு பிரச்சனை; சமாதானம் செய்து வைத்த அமைச்சா் சேகா்பாபு

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

minister Sekbabu who settled  kaniyakumari temple issue

 

குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா அடுத்த மாதம் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்க இருக்கிறது. இதில் கேரளா மற்றும் குமாரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த லட்சக்கணக்கான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள். திருவிழாவின் போது ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் சமய மாநாடு நடத்தப்படுவது வழக்கம். 85 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த மாநாட்டில் இந்துக்கள் அல்லாத மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகா்கள் யாரும் கலந்து கொள்வதில்லை.

 

இந்நிலையில், இந்த ஆண்டு சமய மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை நடத்துவதாகக் கூறி அழைப்பிதழும் அடித்து வெளியிடப்பட்டது. இதற்கு ஹைந்தவ சேவா சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாஜக மற்றும் பல இந்து அமைப்புகளும் ஹைந்தவ சேவா சங்கத்துக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இது இந்து மத நம்பிக்கை இல்லாதவா்களை சமய மாநாட்டில் கலந்துகொள்ள வைக்க அமைச்சா் மனோ தங்கராஜின் திட்டமிட்ட சதி என குற்றம் சாட்டினார்கள்.

 

இந்த நிலையில், மண்டைக்காட்டுக்கு வந்த அமைச்சா் சேகா்பாபு சமய மாநாடு நடக்கும் இடத்தைப் பார்வையிட்டதுடன், தொடா்ந்து நாகா்கோவில் விருந்தினா் மாளிகையில் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மற்றும் ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வழக்கம் போல் ஹைந்தவ சேவா சங்கம் சமய மாநாட்டை நடத்துவது என்றும், அதில் இந்து ஆன்மீக சொற்பொழிவாளா்களைக் கலந்துகொள்ள வைப்பது என்றும், மேலும் அதில் கலந்து கொள்பவா்களில் சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தி நடத்துவது என்றும் பேசி முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை ஹைந்தவ சேவா சங்கமும் அறநியைத்துறையும் ஏற்றுக்கொண்டனா். இதைத் தொடா்ந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் நடத்தப்பட இருந்த போராட்டங்கள் எல்லாம் கைவிடப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்து கோவில்களுக்கு 10% வரி; எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க.வினர்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
The BJP protested for 10% tax on temples in karnataka

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில், பேசிய முதல்வர் சித்தராமையா, “தேவையான அனுமதிகளைப் பெற்று விரைவில் மேகதாது அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன” என்று பேசியிருந்தார். இது தற்போது விவாதப் பொருளாக மாறி வருகிறது. 

அதனைத் தொடர்ந்து, சிகரெட் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து கர்நாடக சட்டப்பேரவையில், அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக சட்டசபையில் ‘கர்நாடகா இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024’ நேற்று முன் தினம் (21-02-24) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின்படி, கோவிலின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருந்தால், அந்த கோவில்கள் 10% வரி செலுத்த வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ள கோவில்கள் 5% வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு, கர்நாடகா பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் விஜயேந்திர எடியூரப்பா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “ஆளும் காங்கிரஸ் அரசு இந்து விரோதக் கொள்கைகளைக் கடைபிடித்து, தற்போது இந்து கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது.

கோவில் வளர்ச்சிக்கு பக்தர்கள் அர்ப்பணிக்கும் காணிக்கையை, கோவில் திருப்பணிக்கு ஒதுக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கிறார்கள். கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வேறு பணிகளுக்கு பயன்படுத்த காங்கிரஸ் அரசு திட்டமிடுகிறது. அப்படி வரி வசூல் செய்வதாக இருந்தால் அனைத்து மத நிறுவனங்களில் இருந்தும் வசூலிக்கலாம். ஏன் இந்து கோவில்களில் இருந்து மட்டும் வசூலிக்க வேண்டும்” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். 

Next Story

“ஆறு இடங்களில் சாமி தரிசனம் செய்ய ரோப்கார்” - அமைச்சர் சேகர்பாபு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Minister Sekar Babu says should have darshan of Swami at six places

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 20 கோடி மதிப்பீட்டில் முடிவுற்று திறக்கும் தருவாயில் உள்ள ரோப்கார் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மாநில கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து ரோப் கார் வெள்ளோட்டத்தில் பயணம் செய்து மலை மேல் உள்ள லட்சுமி நரசிம்மரை சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “லட்சுமி நரசிம்மர் கோவில் இன்றைக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விமான நிலையத்தில் உள்ள அமைப்புகளை போன்று மின் தூக்கி வசதி, உட்கட்டமைப்பு வசதிகளின் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சிறு சிறு பணிகளில் குறைகள் உள்ளது. அவை முழுமையாக முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால், ரோப்கார் பணி விரைவில் பக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் இக்கோவிலில் அரசியல் ஆதாயத்திற்காக இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பழனிசாமி பணிகள் முடிக்கப்படாமலேயே திறந்து வைத்து கல்வெட்டு வைத்தனர் என விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் மேலும் ஆறு திருக்கோவில்களில் ரோப்கார் அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளதாக ஆராயப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இரண்டு இடங்களில் ரோப்கார் பணி துவங்க 27 கோடி தமிழக முதல்வர் ஒதுக்கி இருப்பதாகவும் விரைவில் அப்பணி துவங்கும் என தெரிவித்தார்.

திருத்தணி முருகன் கோவிலில் உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசனம் எப்போது நினைத்தாலும் இறைதரிசனத்தை மேற்கொள்ளலாம். ஆனால் அரசியலுக்காக துறையின் மீதும், அரசின் மீதும் எந்தவித குற்றங்களை சுமத்த முடியாத காரணத்தால், இது போன்று சிறு சிறு பிரச்சனைகளைக் கூட ஊடகங்களில் பேசி பெரிதாக்கி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையினுடைய கருத்துக்கு பதில் அளித்தார்.