/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/173_6.jpg)
தஞ்சாவூரில் இருந்து பூதலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது களிமேடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான அப்பர் மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல 94ஆம் ஆண்டு சதயவிழா நேற்று தொடங்கியது.
விழாவின் ஒரு பகுதியாக, நேற்று இரவு மின் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து வீதி உலாவாக கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்து தேர் திரும்பியபோது, சப்பரத்தில் அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த இரும்புக்குழாய் ஒன்று மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. கீழே மின் விளக்குகளுக்காக அதிக திறன் கொண்ட ஜெனரேட்டரும் இழுத்து வரப்பட்ட நிலையில் இரு மின்சாரமும் ஒன்றுக்கொன்று உரசி அதிக மின் அழுத்தத்தால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தஞ்சை தேர் விபத்து தொடர்பாக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகள் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தன. அதற்கு விளக்கமளித்த பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்த்திருவிழா அல்ல, அது தேரும் அல்ல. அது சப்பரம். இந்த சப்பரத் திருவிழா அரசுக்குத்தெரிவிக்காமல் ஊர்மக்களாகவே நடத்தியது" எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)