Skip to main content

“சுவாமிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்..” தீட்சிதர்களுக்கு அறிவுறுத்திய அமைச்சர் சேகர்பாபு 

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

Minister Sekarbabu Inspected in thiruvaru temple

 

“திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களையோ, இடங்களையோ  விற்கபட்டிருந்தால், அதற்கான ஆதாரம் திரட்டி அந்த தீய செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அமைச்சர் சேகா்பாபு.

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு இராஜகோபலசுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு  ஆய்வு மேற்கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

கோயில் தீட்சிதர்களிடம் சக்கரத்தாழ்வர் சன்னதியை திறக்க வேண்டும், கோயிலில் உள்ள அனைத்து சுவாமிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், தீட்சிதர்களான உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்தார்.


தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்தவர், "திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களையோ, இடங்களையோ விற்கபட்டிருந்தால் அதற்கான ஆதாரம் திரட்டி அந்த தீய செயலில் ஈடுப்பட்டவர்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2008ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் அறிவித்த அரசானை படி முதலில் திருக்கோவில் இடங்களை குழுவாக ஆக்கிரமைக்கப்பட்டவர்களை வாடகை தாரர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டபிறகு தான் அவர்களுக்கு வாடகை தாரர்களாக மாற்றிய பிறகு தான் அவர்களுக்குரிய நடவடிக்கை எடுக்கபடும்.    

 

Minister Sekarbabu Inspected in thiruvaru temple

 

தமிழக அமைச்சரவை ஆய்வு கூட்டத்தில் ஊதியம் குறித்து கருத்து பரிமாறபட்டது. வருமானம் இருக்கின்ற திருக்கோவில்கள் வருமான இல்லாத திருக்கோவிலுக்கு வருமானத்தை பகிர்ந்து அளிக்க முடியாத நிலை உள்ளது குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. திருக்கோவில்களில் ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளர். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடி உருண்டு புரண்டு என்ன பொய் சொன்னாலும் மக்கள் நம்புவதாக இல்லை'-அமைச்சர் சேகர்பாபு பேட்டி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
'Modi rolled over, people did not believe whatever lie  told'- Minister Shekharbabu interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. திமுகவும், பாஜகவும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்போது முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

'Modi's role is over, people don't believe what they don't' - Minister Shekar Babu in an interview

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

'Modi rolled over, people did not believe whatever lie  told'- Minister Shekharbabu interview

அதேபோல் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கச்சத்தீவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறது. நாட்டு மக்கள் உண்மை நிலையை அறிந்ததால் தான் தொடர்ந்து பாஜகவிற்கு தமிழகத்தில் தோல்வியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற வார்த்தை உண்டு. அதற்கு முழுக்க முழுக்க தகுதி படைத்தவர் பிரதமர் மோடி.

கச்சதீவை பொறுத்த அளவில் அன்றைய முதல்வர் கலைஞர் கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்கிற சூழல் வருகின்ற பொழுது அது குறித்து முதன் முதலில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அன்றைய முதல்வர் கலைஞர் அறிவித்த  கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதோடு மட்டுமல்லாமல் கச்சத்தீவு பறிபோய் போய்விடக் கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், மத்திய அரசுக்கு இந்த கச்சத்தீவை ஒப்படைக்க கூடாது என முதன் முதலில் குரல் எழுப்பியவர் கலைஞர். ஆகவே மோடி உருண்டு புரண்டு பொய் சொன்னாலும் சரி, தண்ணீருக்குள் போய் பொய் சொன்னாலும் சரி, பறந்து வந்து பொய் சொன்னாலும் சரி தமிழக மக்கள் நம்புவதாக இல்லை'' என்றார்.

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.