Skip to main content

“இந்து அமைப்பினர் கோவில் சொத்துக்களை ‘ஸ்வாஹா’ செய்துவிட்டனர்” - அமைச்சர் சேகர்பாபு தரப்பு வாதம்

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Minister Sekar babu argued sanathana issue in high court

 

சென்னையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

சனாதன விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ - வாரண்டோ வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று (07-11-23) விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என். ஜோதி ஆஜராகி வாதிட்டார்.

 

அதில் அவர் வாதத்தை முன்வைக்கையில், “இந்து அமைப்பினர் கோவில் சொத்துக்களை ‘ஸ்வாஹா’ செய்துவிட்டனர். அந்த சொத்துக்களை எல்லாம் அமைச்சர் சேகர்பாபு மீண்டும் திரும்ப மீட்டதால் தான் அவருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். மனு ஸ்மிருதி என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது என்று இந்து நூல்கள் கூறுகிறது. எனவே, சனாதனம் ஒழிப்பு வாதம் கண்டு கோபப்படாமல் அதை மாற்றத்துக்கான ஒரு வழியாக பார்க்க வேண்டும்.

 

சேகர்பாபு அய்யப்ப சாமியின் பக்தர் ஆவார். இந்து மதத்தைச் சேர்ந்தவர் தான். இந்துவாக பிறந்ததை பெருமையாக கருதினாலும், அதற்காக ஒருபோதும் சனாதனத்தை ஏற்க முடியாது. ஏனென்றால், பன்றி நுகர்ந்த உணவையும், சூத்திரன் கண்ணால் பார்த்த உணவையும் உண்ணக்கூடாது என்று சனாதனம் சொல்கிறது. இப்படிப்பட்ட சனாதனம் நமக்கு தேவையா? இதை ஒழிக்க வேண்டாமா? மனிதனை தரம் தாழ்த்தும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். ஆகவே, இந்துக்களுக்கு சனாதனம் தான் பொதுவானது என்று சொல்வதை ஏற்க முடியாது. அதை எதிர்ப்பதால் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறவும் முடியாது” என்று வாதிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பா.ரஞ்சித் யார் எனத் தெரியாது” - அமைச்சர் சேகர் பாபு

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
sekar babu about pa ranjith

இயக்குநர் பா.ரஞ்சித் சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக தி.மு.க. அரசு மீது பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தார். அதில் திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான பட்டியலின மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது பட்டியலின மக்கள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உள்ளிட்ட பல கேள்விகள் அடங்கும்.   

இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி நேற்று சென்னையில் பேரணி நடத்தினார். அதில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் பா. ரஞ்சித் யார் என எனக்கு தெரியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத இடங்களை புதிய திட்டங்களுக்கு செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார் சேகர் பாபு. அப்போது அவரிடம் பா.ரஞ்சித் பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பா.ரஞ்சித் யார் என தெரியாது என்ற அவர், “அரசியல்வாதி என்றால் எனக்கு தெரியும். இவரை எனக்குத் தெரியாது” எனப் பதிலளித்தார். 

முன்னதாக பா.ரஞ்சித்தின் கேள்விகளுக்கு திமுக தரப்பிலிருந்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் சரவணன், “தமிழ் நாட்டின் காவல்துறை சிறப்பான அமைப்பு. இந்த வழக்கில் எல்லா குற்றவாளிகளையும் கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள்” என விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

'410 ஆசிரியர்களுக்குப் பணி வழங்குக' - நீதிமன்றம் உத்தரவு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
'Give employment to 410 teachers'- court orders

10 ஆண்டுகளாக காத்திருக்கும் 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டி தேர்வை எதிர்த்து 410 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடைந்த நிலையில் 10 ஆண்டுகளாக 410 ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்திருந்து வருகின்றனர். தகுதித் தேர்வு எழுதி பணி நியமனத்திற்கு காத்திருக்கும் நேரத்தில் 2018 ஆம் ஆண்டு போட்டி தேர்வை அரசு கொண்டு வந்ததால்  பணி நியமனம் இல்லாமல் காத்திருக்கும் ஆசிரியர்கள் 410 தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ள நீதிபதி மகாதேவன் அமர்வுக்கு முன்பு விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போட்டித் தேர்வு என்பது 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு அதற்கு முன்னதாகவே மனுதாரர் 410 பேரும் மாநில அரசின் திட்டத்தின் படிதகுதித் தேர்வு எழுதியுள்ளனர். எனவே 410 பேருக்கும் தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.