Skip to main content

ஸ்டாலின் VS அழகிரி... அட சும்மா இருங்கப்பா... ராஜேந்திர பாலாஜி ட்விட்...!

Published on 19/01/2020 | Edited on 19/01/2020

உள்ளாட்சி தேர்தலில் இணைந்து செயல்படுவதில் கூட்டணிக்களுக்கு இடையே ஏற்பட்ட அதிருப்தியால், "ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து திமுக தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

Minister rajendra balaji tweet about stalin

 



இந்நிலையில் கே.எஸ்.அழகிரி, கட்சியின் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள். பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறுகையில், "திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவு இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது குறித்து பேசியுள்ளோம். இனி கருத்து வேறுபாடுகள் எழுந்தால் நானும், ஸ்டாலினும் பேசி தீர்வு காண்போம். மற்றவர்கள் பேச தேவையில்லை" என்றார்.


இந்நிலையில் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்தும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை ஒப்பிட்டும் கிண்டலாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி "அட சும்மா இருங்கப்பா.. ஸ்டாலின் அண்ணாச்சிக்கி அழகிரி என்ற பெயர் ஆகவே ஆகாதப்பா.. அது மதுரை என்றாலும் சரி, கடலூர் என்றாலும் சரி..." என தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்