Skip to main content

“குலத் தொழிலை உடைத்துக் காட்டியதே உயர்சாதியினர் தான்” - அமைச்சர் பி.டி.ஆர்.

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

 Minister P.T.R.Palanivel Thiagarajan says It is the upper castes who have done away with the clan industry

 

பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது, கைவினைத் தொழில்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டம் தொடங்கப்படுவதாகக் கூறினார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இத்திட்டத்திற்காக 13 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த ’விஸ்வகர்மா யோஜனா’ என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வரும் குலக் கல்வித் திட்டத்தைக் கண்டிக்கும் வகையிலும், எதிர்க்கும் வகையிலும் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “கல்வி எல்லாருக்கும் முன்னேற்றத்தை தரும். இதில் மாற்றுக் கருத்துக்கு எந்தவித வாய்ப்பும் இல்லாத ஒரு உண்மை. அதை முதல் முதலில் அந்த அரிய வாய்ப்பை நமக்கு கொடுத்தவர்கள் உயர்சாதியினர்கள். 1928 ஆம் ஆண்டில் என் தாத்தா பி.டி.ராஜன் சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, அர்ச்சகர் என்ற ஒரு தொழில் அல்லது ஒரு சமுதாயம் ஏன் இருக்க வேண்டும்?  நாம் அனைவரும் இறைவனை பின்பற்றுகிறோம். வேண்டுமென்றால், அந்த பணியை செய்கிறோம். ஆனால், அந்த தொழிலுக்கு அப்படி என்ன ஒரு சிறப்பு இருக்கிறது? அதற்கு நீங்கள் மட்டும் தான் கருவறைக்கு சென்று பூஜை செய்ய முடிகிறது என்று கேள்வி கேட்டார்.

 

அப்பொழுது அவருடைய கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, எங்களுக்கு மட்டும் தான் ஸ்லோகம் தெரியும், சமஸ்கிருதம் தெரியும் அதனால் நாங்கள் மட்டும் தான் கருவறைக்குச் சென்று பூஜை செய்வோம் என்று எதிர்வினையாற்றினார்கள். ஏனென்றால், அவர்கள் மட்டும் தான் அதைப் படித்திருந்தார்கள். மேலும், வேறு யாருக்கும் படிப்பதற்கு வாய்ப்பு கொடுக்காததால் அப்படி கூறினார்கள். ஆனால், அதில் கூட இரண்டு பிழை இருக்கிறது.

 

சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு தான் இறைவனை பின்பற்ற வேண்டும் என்பது முதல் பிழை. நீங்கள் வேறு யாருக்கும் வாய்ப்பு கொடுக்காததால் அந்த மாதிரி கருவறைக்கு சென்று பூஜை செய்ய உருவாக முடியவில்லை என்பது இரண்டாவது பிழை. இரண்டாவது பிழையை இந்த ஆட்சி வந்த பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு ஆண்டும் திருத்தி காண்பித்துக் கொண்டிருக்கிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற கலைஞர் காலத்தில் இருந்து உருவாக்கி வந்த திட்டத்தை முழுமைக்கு கொண்டு வந்து, இன்று பலரை நியமித்திருக்கிறோம். அதில் நேற்று மூன்று பெண் அர்ச்சகர்களுக்கு நியமன பத்திரிக்கை வழங்கப்பட்டிருக்கிறது.

 

1920 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். அதில், 3 சதவீதம் மக்கள் தொகையை கொண்ட ஒரு சமுதாயம், முன்சிஃப் பதவியில் 40 சதவீதமும், அரசு பணியில் 50 சதவீதமும், மருத்துவத் துறையில் ஒரு பெரும்பான்மை கொண்ட மக்கள் என்று எப்படி இருக்க முடியும் என்று கேட்டார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு மட்டும் தான் கல்வி வாய்ப்பு கிடைக்க பெற்றது. அதை திருத்தும் வகையில் தான் கட்டாயக் கல்வி, அதே போல் இட ஒதுக்கீடு என்று வழங்கப்பட்டது. 

 

ஆனால், குலக்கல்வி என்ற உங்கள் தந்தை செய்த தொழிலை தான் நீங்கள் செய்ய வேண்டும் என்ற மாடலை நமக்கெல்லாம் உடைத்துக் காட்டியதே அந்த உயர்சாதியினர்கள் தான். ஏனென்றால், அர்ச்சகர்களாக இருந்தவர்களெல்லாம், முன்சிஃப் வேலையிலும், கலெக்டர் வேலையிலும், வழக்கறிஞர் வேலையிலும் இருக்கிறார்கள். அப்பவே அவர்கள் அந்த தொழிலை விட்டு வேறு வேலைக்கு போய்விட்டார்கள். நீங்கள் பிறந்ததற்கும், நீங்கள் செய்ய வேண்டிய தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை என்று நமக்கெல்லாம் எடுத்துக்காட்டாக இருந்தவர்கள் உயர்சாதியினர்கள் தான். இனிமேல், தந்தை செய்த தொழிலைத் தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று சொன்னால், நீங்கள் செய்தது மட்டும் நியாமா? என்று நாம் கேள்வி கேட்போம்.

 

சமூகநீதி என்ற முயற்சியை நூறாண்டுக்கு மேல் நீதிக்கட்சி காலத்தில் இருந்து நான்காவது தலைமுறையாக திராவிட இயக்கத்தின் தொண்டனாக பணியாற்றி வருகிறேன். இந்த முக்கிய தருணமான, நாடு எந்த திசையில் போகும் என்று தீர்மானிக்கும் இந்த தேர்தலுக்காக நான் பணி செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு வயது 57 ஆகிறது. ஒரு வகையிலோ அல்லது இன்னொரு வகையிலோ எனது குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், நாட்டுடைய எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது. 

 

எனவே, இதை தொலைக்காட்சி மூலமாக பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். ஒரு நாட்டுடைய முன்னேற்றத்திற்கு எந்தளவுக்கு  பொருளாதாரம் முக்கியமோ, அந்தளவுக்கு சமமான வளர்ச்சி வாய்ப்பும் முக்கியம். சாதி, மதம், சமுதாயம் வேறுபாடின்றி அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை தான், எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமான தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கும். அதில் குறிப்பாக, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நீங்கள் தான் எதிர்கால வழக்கறிஞர்கள், நீதியரசர்கள், தினமும் வாதாடக் கூடியவர்கள் மற்றும் ஜனநாயக சட்டமைப்பை பாதுகாக்கக் கூடியவர்கள். எனவே, உங்களது பணி சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு முறைகேடு; திமுக போராட்டம் ஒத்திவைப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
NEET examination malpractice DMK struggle postponed

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து ஜூன் 24 ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

தொகுதி மக்களின் கனவை நினைவாக்கும் அமைச்சர் சக்கரபாணி!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Minister Chakrapani remembers the dream of the people of the constituency!

                               அமைச்சர் சக்கரபாணி

அறுபது வருடங்களுக்கு முன்பு தொழிற்பேட்டை உருவானதின் மூலம் தான் பூட்டுக்கு பெயர் போன நகரமாக திண்டுக்கல்  பேசப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து நிலக்கோட்டையில் இரண்டாவது  தொழிற்பேட்டையை தொடர்ந்து மூன்றாவது தொழிற்பேட்டை கூடிய விரைவில்  உருவாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலேயே ஒட்டன்சத்திரம் தொகுதி தான்  பெரும்பாலும் விவசாய நிறைந்த பூமியாக இருந்து வருகிறது. அதிலும்  தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல பகுதிகள் வானம் பார்த்த பூமியாக படர்ந்து  போய் கிடக்கிறது. இப்படிப்பட்ட பகுதிகளில் தொழிற்பேட்டை (சிட்கோ) கொண்டு  வந்தால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் அதோடு தொகுதியும் வளர்ச்சி அடையும் என அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான  சக்கரபாணியிடம் வலியுறுத்தி வந்தனர். அதனையேற்று, கொத்தையம் ஊராட்சியில் உள்ள அரளிகுத்து தரிசுநிலத்தில் தொழிற்பேட்டை கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை  அதிகாரிகள் துணையோடு அமைச்சர் செய்துவந்தார்.

Minister Chakrapani remembers the dream of the people of the constituency!

                                            கலெக்டர் பூங்கொடி

இந்நிலையில் இதனை எதிர்த்து, அப்பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் கடந்த 25.9.2023ம் தேதி  சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் அரளிக்குத்து குளத்தில் தொழிற்பேட்டை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அதன்மூலம் விவசாயமும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.  அதனால் குளத்தை சீரமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  குறிப்பிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை 12  வாரத்திற்குள் மனுதாரருக்கு பதில் அளிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு 5.10.2023ம்  தேதி உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் ஆர்.டி.ஓ. தாசில்தார்,  பி.டி.ஓ., பொதுப்பணித்துறை நங்காஞ்சியாறு செயற்பொறியாளர் இப்படி சில  துறை அதிகாரிகளிடம் வாங்கிய ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்தபோது  கொத்தையம் கிராமம், சர்வே எண்: 906, 907, 908 படி 22.00.50 ஹெக்டேரில் உள்ள 54.35 ஏக்கர் அரளிக்குத்து குளம் இல்லை. அரளிக்குத்து தரிசுநிலம் என உறுதி  செய்யப்படுகிறது. அதனால் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று  மாவட்ட கலெக்டர் பூங்கொடியும் மனுதாரருக்கு கோர்ட்டு உத்தரவுப்படி பதில்  அனுப்பி இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

அதைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள தொழிற்பேட்டையில் இருக்கும் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்ட குறு சிறு தொழில்கள் சங்கம் லகு உத்யோக்  பாரதி ஆகிய சங்கங்கள் இந்த புதிய தொழிற்பேட்டை தொடங்க வேண்டும் என  முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை மனு அனுப்பியது மட்டுமல்லாமல் மாவட்ட கலெக்டர் பூங்கொடியிடமும் நேரில் மனு கொடுத்து கொத்தையத்தில்   தொழிற்பேட்டையை உடனே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியும்  இருக்கிறார். அப்படியிருக்கும்போது இப்பிரச்சனையை அரசியலாக்க வேண்டும்  என்ற நோக்கத்தில் அரளிக்குத்து தரிசுநிலத்தை சுற்றியுள்ள விவசாயிகள் அப்பகுதியில் உள்ள எதிர்க்கட்சியினர் மூலம் இதை அரசியலாக்க  தூண்டிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.

Minister Chakrapani remembers the dream of the people of the constituency!

அதனடிப்படையில் தான் பா.ம.க. பொருளாளர் திலகபாமா  மற்றும் பிஜேபி நிர்வாகிகள் அந்த இடத்தை பார்வையிட்டு அரசு சிட்கோ அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தவறினால் அப்பகுதி மக்களை திரட்டி  போராட்டத்தில் குதிப்போம் என அறிக்கையும் விட்டு இருக்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் டெபாசிட் கூட வாங்க முடியாத திலகபாமா எங்கள் தொகுதியில் அரசியல் பண்ண பார்க்கிறார். இது திமுக கோட்டை ஆறுமுறை எங்க அமைச்சரை தொடர்ந்து வெற்றி பெற வைத்து இருக்கிறோம். அதனால்தான்  தற்போது மந்திரியான உடன் இரண்டு கல்லூரிகள், ஐடிஐ, ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் விவசாயிகளுக்காக தொழிற்சாதன கிட்டங்கி, மார்க்கெட் மற்றும்  ஆயிரம் கோடியில் தொகுதியில் நிரந்தர காவேரி கூட்டுக் குடிநீர்; திட்டம், இடையகோட்டை பசுமை மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ஒரு லட்சத்திற்கு மேல்  மரக்கன்றுகள் நட்டு மரம்போல் வளர்ந்து இயற்கை சூழ்நிலையே மாற்றி  இருக்கிறது.

இப்படி பல திட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறார். அதுபோலதான் எங்களின் நீண்ட நாள் கனவான தொழிற்பேட்டையைக் கொண்டுவர இருக்கிறார். அதற்காகத்தான் அரளிக்குத்து புறம்போக்கு நிலத்தை சுற்றியுள்ள விவசாயிகள் எதிர்க்கிறார்களே தவிர பொதுமக்கள் யாரும் எதிர்க்கவில்லை. ஏற்கெனவே இந்த நிலத்தை சுற்றியுள்ள விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப்  புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது தொழிற்பேட்டை வந்துவிட்டால் அது பறிபோய் விடுமே என்ற நோக்கத்தில் தான் அரசியல்வாதிகளைத் தூண்டிவிட்டு வருகிறார்கள். அது எங்க அமைச்சரிடம்  எடுபடாது” என்றார் கொத்தையத்தை சேர்ந்த விவசாயி செல்வராஜ்.  

Minister Chakrapani remembers the dream of the people of the constituency!

                                செல்வராஜ் - பாலசுப்பிரமணி

இது சம்மந்தமாக வெடிக்காரன்வலசையைச் சேர்ந்த  பாலசுப்பிரமணியடத்திடம் கேட்டபோது, “எங்க தொகுதி விவசாய பூமியாக இருந்தாலும் கூட மழைத்தண்ணீர் இல்லாததால் விவசாயமும் சரிவர இல்லை. நூறு நாள் வேலையை நம்பியும் கூட இருக்க முடியவில்லை. அதனால் படித்த இளைஞர்கள் முதல் பெண்கள் வரை திருப்பூர் கோவை உள்பட வெளி  மாவட்டங்களுக்கு வேலைக்கு போய் வருகிறார்கள். அதனால் தான் இங்கு ஒரு  தொழிற்பேட்டை இருந்தால் படித்த இளைஞர்களுக்கும், கூலி வேலை செய்யும்  பொதுமக்களுக்கும் நிரந்தர வேலையாக கிடைக்கும். அதனால் தான் தொழிற்பேட்டை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதன்மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் வராது.  ஏற்கனவே இந்த தரிசுநிலத்தில் அப்பகுதியில் உள்ள மக்களும், விவசாயிகளும்  தங்கள் வீடுகளுக்கும், நிலத்திற்கும் மணல்களை மறைமுகமாக எடுத்ததின்  மூலம்  மேடு பள்ளங்களும் இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு  பலர் இரவு நேரங்களில் மது அருந்துவது மற்றும் சமூகவிரோத செயல்களில்  ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற  நோக்கத்தில்தான் இந்த தொழிற்பேட்டை உருவாவதின் மூலம் எங்க பகுதி தான்  கூடிய விரைவில் பொருளாதார வளர்ச்சி அடைய போகிறது. அதற்கு அமைச்சர் சக்கரபாணி  வழிவகுத்து கொடுத்து இருக்கிறார். அதை நாங்கள்  ஒருபோதும் மறக்க மாட்டோம். எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம்” என்று கூறினார்.

Minister Chakrapani remembers the dream of the people of the constituency!

                        தங்கராஜ் - அண்ணாதுரை- மெய்யப்பன் - ஜெயராமன்

இது சம்மந்தமாக திண்டுக்கல் மாவட்ட சிறுதொழில்  சங்க நிர்வாகிகளான தங்கராஜ், அண்ணாதுரை, மெய்யப்பன், ஜெயராமன்  ஆகியோரிடம் கேட்டபோது, “கொத்தையம் பகுதியில் புதிதாக தொழிற்பேட்டை  துவங்குவதின் மூலம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு வராது. அப்பகுதி மக்களுக்கு உதவிகரமாகத்தான் இருக்கும். அப்பகுதியில் உள்ள  மக்களும் விவசாயம் சம்மந்தப்பட்ட தொழில் தொடங்கி கொள்ளலாம். இதில்  லேத், காய்கறி பதப்படுத்துதல், கண்வலி கிழங்கு பதப்படுத்துதல், முருங்கை  பவுடர் தயாரிப்பு, மாம்பழ ஜீஸ் குடோன் மற்றும் விவசாய கருவிகள்  செய்யக்கூடிய தொழிற்சாலை, விசைத்தறி, மாட்டுத்தீவனம், கோழித்தீவனம்,  சேமியா, தறி உள்பட பல குறு சிறு தொழில்கள் தொடங்கலாம்.

இதன்மூலம் ஆயிரம் படித்த இளைஞர்கள் பயனுள்ளதாக இந்த தொழிற்பேட்டை இருக்கும். அப்பகுதியில் படித்த இளைஞர்களும் விவசாயிகளும் சொந்தமாகக் கூட தொழில் ஆரம்பிக்கலாம். இப்படி 55 ஏக்கர் உள்ள இந்த புறம்போக்கு நிலம் மூலம் சுமார்  நூறு தொழிற்கூடங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது. இப்படி சிறு தொழில்  ஆரம்பிக்கக்கூடிய இளைஞர்களுக்கு அனைத்து மாவட்ட சங்கங்களும் அனைத்து  உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறது. ஆகவே கூடிய விரைவில் அமைச்சர்  சக்கரபாணி இந்த தொழிற்சாலையை அமைத்துத் தருவார் என்ற நம்பிக்கையில்  இருந்து வருகிறோம்” என்றனர் உறுதியாக.