தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி நடத்திய கூடைப்பந்து விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில், நடிகர் விஜய் சேதுபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “விஜய் சேதுபதியுடன் இந்த மேடையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் பொழுதுபோக்கும் நேரமும், வகையும் மாறும். எனக்கு அவ்வளவு நேரமும் இல்லை. படம் அதிகம் பார்த்த அனுபவம் இல்லை. இருந்தாலும், நான் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகன்.
ஒரு பொது தொழிலில் இருந்து கொண்டு அரசாங்கம் எதுவாக இருந்தாலும் தைரியமாகவும், தெளிவாகவும் கருத்து சொல்பவர் விஜய் சேதுபதி. அரசியல் தனித்துவம் பெற்றதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேசமயம், பல கோடி மக்கள் போல், நானும் அவரின் ரசிகன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசினார்.