Published on 13/01/2022 | Edited on 13/01/2022

தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் கோவிலில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் அர்ச்சகர்கள் உள்ளிட்டவர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.என்.நேரு, அர்ச்சகர்கள் 14 பேர், கோவில் பணியாளர்கள் 15 பேர், இதர பணியாளர்கள் 34 பேர், அன்னதான பணியாளர்கள் 7 பேர் என மொத்தம் 70 பேருக்கு புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கினார்.