Skip to main content

“இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

Published on 15/09/2023 | Edited on 15/09/2023

 

Minister MRK Panneerselvam comments on magalir urimai thogai Scheme

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை வகித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை  அட்டையை வழங்கி தொடங்கி வைத்தார்.

 

அப்போது அவர் பேசுகையில், “கலைஞர் முதல்வராக இருந்தபோது கலைஞர் காப்பீடு திட்ட அட்டை வழங்கினோம். அது ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது முதல்வரின் காப்பீடு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் அட்டை வழங்கியுள்ளோம். மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்குகிறோம். ஒரு பெண் முதல்வராக இருந்தபோதும் கூட இதுபோன்ற திட்டம் இல்லை. ஆனால் தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், செயல்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர், 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு இந்தியாவிலேயே முதன் முதலாகத் தமிழ்நாட்டில் தான் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 மாதந்தோறும் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்” என்றார்.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கடலூர் கோ. ஐயப்பன், காட்டுமன்னார்கோவில் ம. சிந்தனைசெல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் திருப்பதி, துணை முதல்வர் பாலாஜி சுவாமிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ், வட்டாட்சியர்கள் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், புவனகிரி சிவக்குமார், சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன், கடலூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் பழநி, மாவட்ட திமுக பொறியாளர் அணி செயலாளர் அப்பு சந்திரசேகரன், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத், திமுக நிர்வாகிகள் சங்கர், நடராஜன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் வட்டாட்சியர் செல்வக்குமார் நன்றி கூறினார். முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சித்மபரம் மேல வீதியில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘2026 தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு’- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
DMK chief M.K.Stal's announcement Formation of coordination committee to face 2026 elections

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு மேற்கொள்ளப்படும் என தி.மு.க தலைவரும், தமிழக முதல்வரும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளைக் கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் “ஒருங்கிணைப்புக்குழு” பின்வருமாறு அமைக்கப்படுகிறது.

அதன்படி, அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்’ எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முன்கூட்டியே துண்டு போடும் நிர்வாகிகள்; மேடையிலேயே கலாய்த்த அமைச்சர் உதயநிதி!

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Minister Udhayanidhi spoke to administrators about   Deputy Chief Minister

திமுக இளைஞரணி 45வது ஆண்டு விழா இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி தலைமையில் தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் இளைஞரணி முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். அரசியல் களத்தில் எப்படி மக்களைச் சந்தித்துப் பேசுகிறோமோ அதேபோன்று இன்றைய காலத்தில் சமூக வலைத்தளமும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பொய்யையே பேசி, பொய்யையே பரப்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதனால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருங்கள்.

காலையில் எழுந்தவுடன் முரசொலியைத் தவறாமல் படித்துவிடுங்கள். முதல்வரின் அறிக்கைகள், அரசின் திட்டங்கள் என்னுடைய அறிக்கைகள், என அனைத்தையும் படித்துவிடுங்கள். முரசொலியில் தினமும் ஒரு பக்கத்தை இளைஞர் அணிக்கென்று ஒதுக்கி அதில் கருத்துகளை வெளியிட்டு வருகிறோம். முதல்வர் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனையேற்று  முதற்கட்டமாக 50 தொகுதிகளிலும் நூலகத்தைத் திறந்துள்ளோம். மிதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் நூலகம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் பேச்சு போட்டி நடத்தி 100 சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமையிடத்தில் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டிருந்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தற்போது தொடங்கியிருக்கிறோம். இதற்காக 30 நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அனைத்து மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பேச்சாளர்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.

இந்த மேடையில் அனைவரும் பேசி நான் துணை முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினீர்கள். பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள், வதந்திகள் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து இது நடக்கப்போகிறதோ என்று யூகத்தில் நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கே பேசியுள்ளனர். இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் முதல்வரின் மனதிற்கு நெருக்கமான பொறுப்பு. நான் முன்பே கூறியதுபோல, எல்லா அமைச்சர்களுமே எங்களின்  முதல்வருக்குத் துணையாகத்தான் இருப்போம் என்றேன். அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம்.

எனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான். ஆகையால் எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன். நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு உழைத்ததை போன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்காக உழைப்போம். 2026 என்ன நடந்தாலும், எந்தக் கூட்டணி வந்தாலும் ஜெயிக்க போவதும் நம்முடைய கூட்டணிதான். அதைமட்டுமே இளைஞரணி தம்பிமார்கள் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.