தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்குகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கோடை கால கடுமையான வெப்பம் மற்றும் வெப்பநிலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். மேலும், மாணவர்களுக்கு பழங்கள் மற்றும் இளநீர் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment