






Published on 22/10/2021 | Edited on 22/10/2021
இன்று (22.10.2021) சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்தைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு பேருந்தைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.