![minister kn nehru water tank opening ceremony in trichy municipal corporation](http://image.nakkheeran.in/cdn/farfuture/CzKI-uIIxE7QoLTp1t7W0sZ4qmx-GO1PJzd-jqQ4mp8/1677478748/sites/default/files/inline-images/water-art.jpg)
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10வது வார்டு வள்ளுவர் தெருவில் ரூபாய் 3.35 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியையும், அதனைத் தொடர்ந்து கேனக்கரை ரோடு செல்வமுத்துமாரியம்மன் கோயில் தெருவில் ரூபாய் 1 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.