
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி திருவானைக்கோயில் சென்னை ட்ரங்க் ரோடு பேருந்து நிலையம் முதல் சென்னை புறவழிச்சாலை வரையிலான சாலைகளின் மையப் பகுதிகளில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து 88.75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 150 வாட்ஸ் திறன் கொண்ட 56 ஹெரிடேஜ் வகையிலான மின்சார சேமிப்பு எல்இடி விளக்குகள் செயல்பாட்டினை இன்று (18.04.2023) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன் இ.ஆ.ப., ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, முதன்மை பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.