Skip to main content

44 குடும்பங்களுக்காக 44 வருடக் கனவை நிறைவேற்றிக் கொடுத்த அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
Minister I.Periyasamy fulfilled the dream of 44 years for 44 families

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமி தொகுதியான ஆத்தூர் தொகுதியில் இருக்கும் குட்டத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய முத்தனம்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமார் 44 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் கடந்த 1980ம் ஆண்டு முதல் அப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள மாங்கரை ஆற்றின் குறுக்கே மேம்பால வசதி வேண்டுமென முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் இருந்தபோது கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். 

அதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் வலியுறுத்தியதின் பேரில் மாங்கரை குறுக்கே பாலம் கட்ட திட்டமிட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த 10 வருடங்களாக அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டு இத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது தொகுதிக்கு கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு கேட்டு சென்றபோது தாங்கள் பாலம் கொண்டு வர முயற்சி செய்ததையும் அதிமுக முட்டுக்கட்டை போட்டுவிட்டனர். அதனால் தொடர்ந்து மாங்கரை ஆற்றில் இறங்கி தான் ஊருக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருந்து வருகிறோம். தாங்கள் மீண்டும் வெற்றி பெற்று அமைச்சராக வந்தவுடன் எங்களுக்கு மாங்கரை ஆற்றின குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். அதைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் முதல்வராக ஆன பின் பழைய முத்தனம்பட்டியில் வசிக்கும் 44 குடும்பங்களுக்காக 44 வருட கனவை நிறைவேற்றும் வகையில் மாங்கரை குறுக்கே பாலம் கட்டுவதற்காக மூன்று கோடியே 85 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜையுடன் திட்டப் பணிகளை அமைச்சர்  ஐ. பெரியசாமி தொடங்கி வைத்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த பழைய முத்தனம்பட்டி மற்றும் மாங்கரை கிராம மக்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்ததுடன் மட்டும் அல்லாமல் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் கும்ப மரியாதையுடன் மலர் தூவியும் அமைச்சர் ஐ. பெரியசாமியை வாழ்த்தினார்கள். அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, பாலம் கட்டுமான பணி முடிந்தவுடன் ரோடு வசதியை மீண்டும் சரி செய்து இரண்டு பக்கமும் லைட் போட்டு கொடுக்கப்படும். அதோடு ஒவ்வொரு வீட்டிலேயும் இரண்டு குடும்பம் மூன்று குடும்பம் என வசித்து வருகிறார்கள். அவர்களுக்காகவே பழைய வீடுகளை எல்லாம் புதுப்பித்து புதிதாக கூடுதலாகவும் வீடுகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் கூடிய விரவில் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆலோசனை; களத்தில் இறங்கிய உ.பி.கள்!!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Minister I. Periyasamy consultation with Theni district party officials

தேனி பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் அதிமுக சார்பில் தேனி ஒன்றிய செயலாளர் நாராயணசாமி, பிஜேபி கூட்டணி கட்சி சார்பில் அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட சில கட்சிகளும் தேர்தல் களத்தில் வளம் வருகிறார்கள்.

தேனி பாராளுமன்ற தொகுதியைப் பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளும் மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் பெரியகுளம், கம்பம்‌, ஆண்டிபட்டி, சோழவந்தான் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளை ஆளுங்கட்சி கைப்பற்றியுள்ளது. போடி, உசிலம்பட்டி  தொகுதிகளை எதிர்க்கட்சியான அதிமுக வசம் உள்ளது. அதை வைத்து பார்க்கும் போது இத்தொகுதி ஆளுங்கட்சியான திமுகவுக்கு சாதகமாக தான் இருந்து வருகிறது. அது போல் கடந்த தேர்தலில் அதிகாரம் பண பலம் இருந்தும் கூட ஓபிஎஸ் மகன் ஓபிஆர் 5,04,813 ஓட்டு தான் வாங்கினார். ஆனால் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கிய இ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிகாரம் பண பலம் இல்லாமல் 4,28,120 லட்சம் ஓட்டு வாங்கி குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் (76693) தோல்வியை தழுவினார்.

Minister I. Periyasamy consultation with Theni district party officials

ஆனால் தற்பொழுது அதிமுக உடைந்திருப்பதால் அந்த ஓட்டுகளும் சிதற வாய்ப்பு உள்ளது. அது போல் டிடிவிக்கும் இலை ஓட்டுகள் விழுக வாய்ப்பு உள்ளது. அதனால் கடந்த முறை வாங்கிய ஓட்டுகள் வாங்கினாலே தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்று விடுவார். அதனால்தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தேனி பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினோ, இத் தொகுதியை அமைச்சர் ஐ.பெரியசாமி வெற்றி பெற வைத்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது போல் தமிழக அளவில் அதிக ஓட்டுகள்  வாங்க வேண்டும் என்று முதல்வர் தேர்தல் பரப்புரையில் பேசி விட்டு சென்றிருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

அதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர்  தங்க தமிழ்ச்செல்வனும் தொகுதியில் களமிறங்கி வாக்காள மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அது போல் தொகுதி பொறுப்பாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ. பெரியசாமியும் தொடர்ந்து தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து தொகுதி முழுக்க  ஆய்வு செய்து பொறுப்பில் உள்ள உ.பி.க்களையும் களத்தில் இறக்கி வருகிறார்.

இந்த நிலையில் தான் தேனி மாவட்டத்திற்கு திடீரென நேற்று  முன் தினம் காலை விசிட் அடித்த அமைச்சர் ஐ.பி. பெரியகுளம்  கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் செல்லபாண்டியன்,  சட்டமன்ற உறுப்பினர் சரவண குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் முக்கையா, உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி கடந்த தேர்தலுடன் கூடுதல் ஓட்டுகள் வாங்கி தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் .

Minister I. Periyasamy consultation with Theni district party officials

அதைத் தொடர்ந்து தேனியில்  நகர பொறுப்பில் உள்ள உ.பி.க்களிடமும் தொகுதி நிலவரத்தை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து போடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் தொகுதி பொறுப்பாளரான மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெயன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன்  கட்சி ஆபீஸ்சில் ஆலோசனை செய்து இத்தொகுதியில் அதிக ஓட்டுகள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இருக்கிறார். அதைத்தொடர்ந்து தர்மத்துப்பட்டி,  நரசிங்கபுரம்பாளையத்திலும் ஒன்றிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து கம்பத்தில் சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் அமைச்சர் ஐ.பி. ஆலோசனை செய்தார் அப்போது கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய ஓட்டுகளை விட கூடுதலாக கம்பம் ராமகிருஷ்ணன் வாங்கி தர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஆண்டிபட்டிக்கு சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமியை சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் உட்பட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருமான ஸ்டாலின் சொன்னது போல் இந்த தொகுதியில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வாங்கி நமது வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்கு எல்லாம் நீங்கள் இரவு பகல் பாராமல் தேர்தல் பணி செய்ய வேண்டும். அப்படி  வேலை பார்த்தால் தான் இத்தொகுதியில் அதிக ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியும். பெரிய வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை அரவணைத்து தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அதோடு கடந்த மூன்று ஆண்டுகளில் தலைவர் செய்த திட்டங்களையும் சலுகைகளையும் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். குறிப்பாக மாதந்தோறும் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமைத் தொகையை மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும். அதன் மூலம் மக்களும் நமக்கு வாக்களிப்பார்கள். அதனால் உடனடியாக தேர்தல் களத்தில் இறங்கி தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்று உறுதிபடக் கூறி இருக்கிறார். அதை தொடர்ந்து உ.பி.களும் தேர்தல் காலத்தில் அதிரடியாக இறங்கி  மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

Next Story

“எங்கள் ஓட்டு அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்திற்குத்தான்” - அமைச்சரிடம் வாக்குறுதி கொடுத்த மக்கள்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Minister I. Periyasamy who collected votes from the people

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணிக்கட்சி சார்பில் சி.பி.எம். கட்சி வேட்பாளராக சச்சிதானம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திண்டுக்கல் மாநகரில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் திறந்த ஜீப்பில் வேட்பாளர் சச்சிதானந்ததுடன் வாக்குசேகரித்தார்.

அதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும் பேகம்பூரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நின்று கொண்டு, தொழுகை முடிந்து வரும் இஸ்லாமிய பெருமக்களிடம் கூட்டணி கட்சி வேட்பாளரான தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு, பிட் நோட்டீஸ் கொடுத்து ஆதரவு திரட்டினார். அப்போது அங்கு கூடியிருந்த இஸ்லாமிய மக்கள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கரங்களைப் பிடித்து எங்கள் ஓட்டு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்துக்குத்தான் என்று கூறி உறுதியும் அளித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, மாநகர மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, பகுதி செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பஜ்குல் ஹக்,  பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம், இலக்கிய அணி அமைப்பாளர் இல.கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் எனப் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.