Skip to main content

“இரண்டு மாதத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

Published on 24/03/2025 | Edited on 24/03/2025

 

Minister I. Periyasamy assured One lakh houses will be built in two months

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம்  பிள்ளையார் ஊராட்சிக்கு உட்பட்ட மாதா நகருக்கு வறட்சி நிவாரண நிதி ரூபாய் 20  லட்சம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நிதி ரூபாய் 10 லட்சம் மொத்தம் 30 லட்சம்  மதிப்பில் புதிய குடிதண்ணீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. திண்டுக்கல் செம்பட்டி  சாலையில் உள்ள சரவணா மில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து  குழாய்கள் பதிக்கப்பட்டு மாதா நகருக்கு குடிதண்ணீர் கொண்டுவரப்பட்டு பொது  மக்களுக்கு விநியோகம் செய்யும் விழா மாதா நகரில் நடைபெற்றது.

விழாவிற்கு  வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார் .ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர்  பிள்ளையார் நத்தம் முருகேசன், வட்டார  வளர்ச்சி அலுவலர் அருள்களாவதி, ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி  முருகேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் வரவேற்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி, “நான் ஆத்தூர் பகுதியில் போட்டியிட்ட காலம் முதல் இன்று வரை 33 ஆண்டுகளாக என் மீது  பாசம் வைத்திருக்கும் கிராமங்களில் என் பஞ்சம்பட்டி கிராமம் ஒன்று என்  பஞ்சம்பட்டி கிராமத்திற்கு ஆத்தூரிலிருந்து கொண்டு வந்து தீர்த்து  வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆரம்ப  சுகாதார கொண்டுவர முயற்சிக்கையில் இடவசதி இல்லாததால் அருகில் உள்ள  ஆலமரத்துப்பட்டி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாலை வசதியாக இருந்தாலும் சரி, குடிதண்ணீர் வசதி ஆக இருந்தாலும் சரி, கிராம ஊராட்சிகளுக்கு  செய்வதை என்னுடைய சேவையாக கருதி நான் செயல்படுத்தி வருகிறேன்.

Minister I. Periyasamy assured One lakh houses will be built in two months

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் பஞ்சம்பட்டி கிராமத்திற்கும்  அதன் வளர்ச்சிக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன். இப்பகுதி மக்கள்  தங்களுக்கு நியாயவிலைக் கடை மற்றும் அங்கன்வாடி மைய வசதி  வேண்டுமென கோரிக்கை கொடுத்துள்ளனர். அவருடைய கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும். தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்ட பின்பு தான் 150 குடும்ப  அட்டைகள் உள்ள இடத்திற்கும் நியாய விலை கடைகள் வசதி செய்து  கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எளிதாக வீட்டுக்கு தேவையான  ரேஷன் பொருட்களை வாங்கி செல்லலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது.

கிராம ஊராட்சிகளை பொருத்தவரை பொதுமக்கள் மற்றும்  விவசாயிகள் நலன் கருதி அவர்களுக்கு தேவைப்படும் இடங்களில் பாலம் வசதி  செய்து கொடுக்கப்படும் இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கலைஞரின் கனவு இல்லம் திட்ட மூலம் தமிழகத்தில் ஒரு லட்சம் வீடுகள்  கட்ட திட்டமிட்டு அதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீதம் பணிகள்  பூர்த்தி அடைந்து விட்டன. ஒரு மாத காலத்தில் அனைத்து வீடுகளும்  பயன்பாட்டிற்கு வந்து விடும்.

குறிப்பாக ஒன்று சொல்ல வேண்டும் என்றால்  இதில் பத்தாயிரம் பயனாளிகள் கலைஞரின் கனவு இல்ல வீட்டுக்கு குடி பெயர்ந்து  விட்டார்கள். ஏப்ரல் மாதம் மீண்டும் ஒரு லட்சம் வீட்டிற்கு மனு பெறப்பட்டு அவர்களுக்கு வீடுகள் தர தயாராக தமிழக அரசு உள்ளது. கிராமப்புற ஏழை எளிய  மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோல பேரூராட்சிகளிலும்  கலைஞரின் கனவு இல்லம் திட்ட மூலம் வீடுகள் வழங்க ஆலோசனை  செய்யப்பட்டு வருகிறது.  விரைவில் தமிழக முதல்வர் அறிவித்தவுடன்  பேரூராட்சிகளிலும் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் கட்டிக்  கொடுக்கப்படும். மற்ற திட்டங்கள் போல் இல்லாமல் கலைஞரின் கனவு இல்லம்  திட்டம் மூலம் வீடுகள் கட்டும் பயனர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு கூட ரூபாய் 400 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டு உடனடியாக வீடு கட்டும் பயனாளர்கள்: வங்கி கணக்கிற்கு  பணம் சேர்ந்து விட்டது காரணம் மக்களின் தேவைகளை புரிந்து அவர்களுக்கான  நல்லாட்சியைத் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அனைவருக்கும்  எல்லாம் அனைவரும் சமம் என்ற நிலைமை தமிழகத்தில் உருவாகிவிட்டது.  அதற்குக் காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் வந்த திராவிட மாணவர் தலைவர் மு க ஸ்டாலின் தான்” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக  பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், முன்னாள்மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜகணேஷ், ஒன்றிய பொறியாளர்கள்  ராமநாதன், பிரிட்டோ, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர்  சிவக்குமார், பொருளாளர் ஜாதிக்கவுண்டன்பட்டி கருப்பையா,  துணைச்செயலாளர்கள் எம்.சி.பாண்டியன், வசந்தா கென்னடி, ராஜேந்திரன்,  சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, அகரம் பேரூராட்சி மன்றத் தலைவர் நந்தகோபால்  முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ராணிராஜேந்திரன், பஞ்சம்பட்டி பாப்பாத்தி,  வீரக்கல் ராஜேஸ்வரிதங்கவேல், , ஆலமரத்துப்பட்டி ஆறுமுகம்,  செட்டியபட்டி ராஜா, செல்வராணி அழகர்சாமி, அரசு ஒப்பந்தகாரர்கள் ஜீசஸ்அகஸ்டின், மெல்வின், ஆலமரத்துப்பட்டி அரவிந்தன், விக்னேஷ்வரன்,  சின்னாளபட்டி பேரூர் கழக பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பொறுப்பு குழு  உறுப்பினர்கள்: மாவட்ட பிரதிநிதி ஆரிய நல்லூர் தங்கவேல் ,எம் .வி .முருகன்  முன்னாள் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கவிதா மனோகரன், முன்னாள், வார்டு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி,எஸ்.கண்ணன், விமலா, கார்த்திக்,  மாணவரணி அமைப்பாளர் அருண், இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.

சார்ந்த செய்திகள்