Skip to main content

லாரியில் ஏறி அரிசியை ஆய்வு செய்த அமைச்சர் சக்கரபாணி

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

Minister Chakrapani inspected the rice in a truck!

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, ஈரோடு, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் அரசுக்கு அரிசி அரைத்துக் கொடுக்கும் அரிசி ஆலைகளில் அமைச்சர் சக்கரபாணி அதிரடியாகக் களமிறங்கி அங்குள்ள அரிசியில் பழுப்பு, கருப்பு, கல் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறார். 

 

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆய்வுப் பணிக்குச் சென்ற அமைச்சர் சக்கரபாணி, அங்குள்ள நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கிற்குச் சென்றார். அப்பொழுது, லாரிகள் மூலமாக ரேஷன் கடைக்குக் கொண்டு செல்ல லோடுமேன்கள் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட அமைச்சர், உடனே ஒரு லாரியில் ஏறி, ஆய்வு செய்ய முடிவு செய்தார். 

 

அப்போது அங்கிருந்த ஒரு லாரியில் அரிசி ஏற்றுவதற்காகப் போடப்பட்டிருந்த ஏணி வழியாக இரும்பு செயினை பிடித்தவாரே லாரியின் மேலே ஏறி, லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை ஒவ்வொன்றாகக் குத்தூசி மூலம் குத்தி அரிசியின் தரத்தை ஆய்வு செய்தார். அதைக் கண்டு அங்கிருந்த லோடுமேன்களும் அதிகாரிகளுமே வியப்படைந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களின் குடிநீர் பிரச்சனை ரூ.1000 கோடியில் பணிகள் நடந்து வருகிறது” - அமைச்சர் சக்கரபாணி

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
People's drinking water problem being worked on  Rs.1000 crore says  sakkarapani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிகளில் ரூ.10.78 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கு நகர மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி மற்றும் எம்பி வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக் கோடி கிராமங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்காக ஒட்டன்சத்திரத்தில் 480 வீடும், கீரனூரில் 430 வீடும் கட்டுவதற்காக அனுமதி வழங்கியுள்ளார்கள். 

ஒட்டன்சத்திரம் பகுதியில் 3 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அம்பிளிக்கையில் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஒட்டன்சத்திரத்தில் கல்லுாரி கட்டடம் கட்டுவதற்கு ரூ.25.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பாட்சியில் தொழிற்பயிற்சி நிலையம் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. படித்து முடித்த பிறகு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தினை  தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் திறந்து வைக்க உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பொருளாதாரத்தில் வாழ்வாதாரத்தினை இழந்த மக்களுக்கு முதல் கையெழுத்திட்டு வாழ்வாதாரத்தினை இழந்த மக்களுக்கு உதவிடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கினார். 

People's drinking water problem being worked on  Rs.1000 crore says  sakkarapani

பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 440 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நபருக்கு தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்கத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒட்டன்சத்திரத்தில் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக ரூ.75.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. தலைக்கையன்கோட்டையில் இருந்து பழனி வரை நான்கு வழிச் சாலையில் மின்விளக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்கள் உயர் கல்வி படிப்பதற்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் ஆண்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு சென்றால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டத்திற்கு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. ஏழை குடும்பங்களைச் சார்ந்த 5 இலட்சம் குடும்பங்களை கண்டறிந்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு தரமான அரிசி வழங்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. 

ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட நாகணம்பட்டி பெரியாஞ்செட்டிபட்டியில் 5 பணிகள் ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 6 பணிகள் ரூ.1.18 கோடி மதிப்பீட்டிலும்,10வது வார்டு பகுதியில் 4 பணிகள் ரூ.6.52 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 15, 16, 17 மற்றும் 18 ஆகிய பகுதிகளில் 8 பணிகள் ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலும், 14-வது வார்டு பகுதியில் 3 பணிகள் ரூ.42.20 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு 7, 9 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் 13 பணிகள் .2.35 கோடி மதிப்பீட்டிலும், வார்டு 1. 4, 5, 6 மற்றும் 8 ஆகிய பகுதிகளில் 16 பணிகள் ரூ.2.62 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 55 பணிகள் ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இன்று(23.02.2024) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார். அவர்களுக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்

Next Story

ரேசன் கடையில் கை விரல் ரேகை பதிவு விவகாரம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Fingerprint registration issue at ration shop TN Govt Order

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 இன் படி பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கை விரல் ரேகை பதிவு அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்ப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கவில்லையெனில் குடும்ப அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று சில நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்க்காதவர்களின் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது, கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது, வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “கை விரல் ரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி ரேசன் கடைக்கு வரவழைக்கக்கூடாது. கை விரல் ரேகை பதிவின் போது ஆவணங்கள் எதையும் கேட்க கூடாது. கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என்ற தவறான தகவலை தரக்கூடாது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ரேசன் கடைக்கு சென்று கை விரல் ரேகையை பதிவு செய்துகொள்ளலாம். ரேசன் கடையில் விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று கை விரல் ரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு இடையூறு இல்லாமல் குழப்பமின்றி கை விரல் ரேகை பதிவு பணியை முடிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.