
கடந்த சில தினங்களாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப்பதிவு தொடர்பாக வெளிவரும் தவறான தகவல்கள் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆண்டுக்கு மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தாலே போதும் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது. கொரோனா காலத்தில் பள்ளிகள் முழுமையாக செயல்படாமல் இருந்த நேரத்தில் அளிக்கப்பட்ட வாய்ப்பு அது.
தற்பொழுது பள்ளிக்கு வரும் மாணவர்கள் பள்ளி வேலை நாட்களில் 75 சதவீதம் வருகைப்பதிவுடன் பள்ளிக்கு வருகை புரிந்திருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையே அமலில் உள்ளது" எனத் தெரிவித்தார்.