Skip to main content

உலக மகளிர் தினம்; புதிய முன்னெடுப்புடன் கொண்டாடிய அமைச்சர்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

minister anbil mahesh poyyamozhi celebrated international womens day celebration 

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அன்பில் அறக்கட்டளை சார்பில் திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கை துவக்கி வைத்து அதற்கான பத்திரம் மற்றும் கணக்கு புத்தகத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதில் தமிழக அரசு கொறடா கோ.வி. செழியன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,  டி ஆர் ஓ அபிராமி, திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சுவாதிமதுர்மா, திருச்சி மாநகர திமுக செயலாளரும் திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவருமான மதிவாணன், பகுதி செயலாளர் நீலமேகம், உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். மாநகராட்சி துணை மேயர் திவ்யா நன்றி கூறினார்.

 

திருவெறும்பூர் அருகே உள்ள எஸ் ஐ டி கல்லூரி மைதானத்தில் நடந்த தமிழக முதல்வரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள 7500 பெண் குழந்தைகளுக்கு அன்பில் அறக்கட்டளை சார்பில் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான பத்திரம் மற்றும் கணக்கு புத்தகம் வழங்கும் விழாவுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வைத்து பேசியதாவது, "அனைவருக்கும் முதலில் மகளிர் தின வாழ்த்துக்கள்   திருச்சி சொந்த மாவட்டம். திருவெறும்பூர் சொந்த தொகுதி. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பெயரில் இந்த கணக்கில் சேமிக்க வேண்டும். இந்த சேமிப்பு தொகையை தங்களது குழந்தை பதினோராம் வகுப்பு  சேரும் பொழுது அல்லது திருமணத்தின் போது எடுக்கலாம். 2021 ஆம் ஆண்டு அமைச்சர் ஆனதும் தமிழகத்தில் பயிலும் ஒவ்வொரு குழந்தைகளும் எனது குழந்தைகளாக பார்க்கிறேன். பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற சேமிப்பு அவசியம். ஆண்கள் சம்பாதித்து செலவு செய்வார்கள். பெண்கள் சேமித்து செலவு செய்வார்கள். அதை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் இது ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகும்.

 

தமிழக முதல்வர் பெண்கள் சார்ந்த திட்டங்களையே செயல்படுத்துகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் கையெழுத்து பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவச பயணத்தை தெரிவித்தார். 12 ஆம் வகுப்பிலிருந்து கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மாணவிகளாகிய நீங்கள் விரும்பிய பதவியை அடைந்து இந்தியாவின் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என்றார்.

 

கலெக்டர் பிரதீப் குமார் பேசியதாவது, "இந்த செல்வமகள் திட்டம் மகளிர் தினத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பானது. பத்து லட்சத்திற்கு மேல் பெண்கள் கொண்ட நகரத்தில் பாதுகாப்பான நகரமாக இந்திய அளவில் சென்னை முதல் நகரமாக விளங்குகிறது.  பத்து லட்சத்திற்கு குறைவாக உள்ள மக்கள் தொகை கொண்ட நகரங்களில் இந்திய அளவில் ஐந்து இடங்களில் தமிழகம் பெற்றுள்ளது.  அதில் முதல் இடமாக திருச்சி உள்ளது. சாதிக்கும் பெண்கள் அமைதியாகத் தான் இருப்பார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் பல சாதனைகளை புரிந்துள்ளார்கள். பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து விட்டனர். மாணவ மாணவிகள் தங்களது இலக்கை அடைவதற்காக படிப்பதுடன் ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.  அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்" என்றார்.

 

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா கூறியதாவது, "மாணவிகள் நன்றாக கல்வி கற்பது மூலம் அமைச்சர், டாக்டர், கலெக்டர், போலீஸ் கமிஷனர் என பல்வேறு பதவிகளை அடைய முடியும்.” மேலும் மாணவிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சுவாதிமதுர்மா பேசியதாவது, "செல்வமகள் திட்டத்தில் சேருவதற்கு குறைந்து ரூ. 250 வருடத்திற்கு செலுத்த வேண்டும். தற்பொழுது 250 ரூபாய் செலுத்தி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. 250 முதல் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வரை கட்டலாம். இந்த திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதுள்ள குழந்தைகள்  பயன்பெறலாம்.   18 வயது ஆகும்போது பாதி தொகையை பெறலாம் 21 ஆண்டு அல்லது திருமணத்தின் பொழுது அது முதிர்வு தொகையை பெறலாம் " என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்புடன் ஊதியம் வழங்கியவர் கலைஞர் தான்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

Published on 25/02/2024 | Edited on 25/02/2024

 

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தோ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக நடைபெற்றது.

கலைஞரின் நூற்றாண்டு விழாவானது திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.ச சார்பாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் முடி திருத்துவோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தொமுச பொதுச்செயலாளர் கணேஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். கூட்டமைப்பு செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். மேலும் இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி மற்றும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொமுச பேரவை பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம், மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மராத்தான் போட்டியில் எட்டு முதல் 18 வயது வரை உள்ள மாணவ மாணவிகள் மற்றும் 12 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ மாணவர்களும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பல்வேறு பிரிவுகளில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். இதையடுத்து முடி திருத்துவோர் சுமார் 400 பேருக்கு மளிகை பொருட்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சுமார் 500 பேருக்கு மளிகை பொருட்கள் ஆகியவற்றை அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேசுகையில், ''கலைஞரின் நூற்றாண்டு விழாவில் தொமுச பங்களிப்பு மிகவும் முக்கியமானது. தொமுச நிறுவுவதற்கு கலைஞர் அரும்பாடுபட்டார். முதன்முதலில் தொழிற்சங்க ஊழியர்களுக்கு விடுப்புடன் ஊதியத்தையும் வழங்கியவர் கலைஞர் தான். எனவே இந்த நிகழ்ச்சி கொண்டாடுவதில் தோமுசவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்''என்றார்.

Next Story

இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Central government allowed Santhan to go to Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 2022 நவம்பர் மாதம் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தங்களை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்தனர். இத்தகைய சூழலில் சாந்தன் தன்னை இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு இந்தியா, இலங்கை மற்றும் தமிழக அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதே சமயம், “கடந்த 32 ஆண்டுகளாக தனது தாயை பார்க்கவில்லை. அவரது முதுமைக் காலத்தில் கூட இருந்து வாழ விரும்புகிறேன். தாயை கவனித்துக்கொள்ள தன்னை இலங்கைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி (13.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “சாந்தன் தாயகம் திரும்ப ஒரு வாரத்தில் அனுமதிக்கான ஆணை வழங்கப்படும்” என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு சார்பில், “சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை பிப்ரவரி 29 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவின் நகல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தன் வரும் 26 அல்லது 27 ஆம் தேதி இலங்கை புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.