திருச்சி துவாக்குடியில் அமைந்துள்ள என்.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தலுக்காக தயாராகி வரும் முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
கரோனா நிவாரண நிதி முதல் கட்டமாக 2,000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை நியாயவிலை கடைகளில் இன்று காலை முதல் தொடங்கி வைத்த அவர், கரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு இடங்களில் தொடர் ஆய்வு செய்தார். அதன்படி, என்.ஐ.டி வளாகத்தில் சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று பார்வையிட்ட போது அரசு அதிகாரிகள் வளாகத்தில் அமைய உள்ள படுக்கைகள் குறித்தும், இதர வசதிகள் குறித்தும் விளக்கிக் கூறினர்.