Skip to main content

இடம்பெயர்ந்த சிறுத்தை; களத்தில் இறங்கிய பொம்மன், காலன் 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Migratory Leopard; Bomman, Kalan who entered the field

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த இரண்டாம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து ஏழாவது நாளாக அந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு சிறுத்தையைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், சிறுத்தை இடப்பெயர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

தற்போதைய நிலவரப்படி மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரம் இடம் பெயர்ந்த சிறுத்தை குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை அடுத்து நேற்று முதல் வனத்துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் சுமார் 15 இடங்களில்  தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்தாண்டு நீலகிரி அருகே உள்ள மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த ஆட்கொல்லி புலியான டி23 புலியைப் பிடிப்பதில் மிகுந்த நேர்த்தியாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகிய இருவரும் மயிலாடுதுறை பகுதிக்கு வந்துள்ளனர். இவர்கள் வனத்துறையுடன் சேர்ந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பல மணி நேர போராட்டம்; பிடிபட்டது சிறுத்தை!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
The leopard was caught in thiruppattur

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளியில் நேற்று (14-06-24) மாலை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வந்தது தொடர்ந்து சிறுத்தை கார் ஷெட் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. வனப்பகுதிகளே சுற்றிலும் இல்லாத நகர் பகுதியில் சிறுத்தை எவ்வாறு வந்தது என்பது பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

சிறுத்தை புகுந்த அந்த கார் ஷெட்டில் இரண்டு கார்களில் மொத்தமாக ஐந்து பேர் சிக்கி இருந்தனர். சிறுத்தை அச்சுறுத்தலால் 5 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளேயே இருந்த அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து, பலமணிநேர போராட்டத்திற்குப் பின் வனத்துறை உதவியுடன் நேற்று இரவு ஐந்து பேரும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வந்தது. இதனால் அங்கு அதிகப்படியான வனத்துறை அதிகாரிகள் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த நிலையில், வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்திய நிலையில், 11 மணி நேரத்திற்குப் பின் சிறுத்தை பிடிபட்டது. இதனால் பொதுமக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர். 

Next Story

சிறுத்தை அச்சுறுத்தல்; கார் ஷெட்டுக்குள் தவித்த 5 பேர் மீட்பு 

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Leopard threat; Rescue of 5 people trapped inside the car shed

திருப்பத்தூரில் தனியார் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறுத்தை புகுந்த கார் ஷெட்டுக்குள் இருந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளியில் இன்று மாலை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து சிறுத்தை கார் ஷெட் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. வனப்பகுதிகளே சுற்றிலும் இல்லாத நகர் பகுதியில் சிறுத்தை எவ்வாறு வந்தது என்பது பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி. இருக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை புகுந்த அந்த கார் ஷெட்டில் இரண்டு கார்களில் மொத்தமாக ஐந்து பேர் சிக்கி இருந்தனர். சிறுத்தை அச்சுறுத்தலால் 5 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளேயே இருந்த அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பலமணிநேர போராட்டத்திற்குப் பின் வனத்துறை உதவியுடன் தற்போது ஐந்து பேரும் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அங்கு அதிகப்படியான வனத்துறை அதிகாரிகள் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.