ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதில் ஊழல் நடைப்பெற்றுள்ளது என குற்றம்சாட்டியும் இதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது ‘’போராட்டத்தின் ஆர்பாட்ட கோஷங்களை எழுப்பினார். அதன்பிறகு தொடர்ந்து பேசுகையில் இந்த அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல, பணக்காரர்களுக்கான அரசு.
இந்த அரசங்காம் ஊழல் அரசாங்கமாக இருந்து வருகிறது.மோடி அரசு மக்களை ஏமாற்றும் அரசாக இருந்து வருகிறது .மோடியின் சிம்ம சொப்பணமாக திகழும் கட்சி காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் தான்.மோடிக்கு மாற்று ராகுல் காந்தி தான்.ராகுல் காந்தி கேட்ட எந்த கேள்விக்கும் மோடி பதில் அளித்ததில்லை.
சுவிஸ் வங்கியிலிருந்து பணத்தை கொண்டு வருவேன் என கூறி இந்திய மக்களின் சுறுக்கு பையில் இருந்து வங்கிக்கு வர வைத்தார். விஜய் மல்லையா,நீரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டு வர முடியவில்லை.
தமிழகத்தில் மிக மோசமான ஊழல் ஆட்சி நடக்கிறது. மத்தியில் காவி ஆட்சியும் மாநிலத்தில் ஆவி ஆட்சியும் நடக்கிறது .ஆவியிடம் எப்படி பேசுவது என தெரிந்தால் நான் ஜெயலலிதாவிடம் பேச வேண்டும் அவரிடம் பல விஷயங்கள் பேச வேண்டும். புழல் சிறையில் செய்யப்பட்டுள்ள வசதி நாளை சிறைக்குள் செல்லவிருப்பவர்களுக்காக செய்யப்படுகிறது’’ என தெரிவித்தார்.