/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/39_68.jpg)
ஆடி மாதம் என்பதால் அம்மன் கோயில் திருவிழா பல ஊர்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நாளை நடைபெறவுள்ளது.
இதனைக் கொண்டாடும் விதமாக அப்பகுதி சிறார்கள் பேனர் வைத்துள்ளனர். அதில் அம்மன் புகைப்படத்தோடு இணைந்து, பிரபல நடிகை மியா கலிஃபா புகைப்படமும் பால் குடம் எடுப்பது போன்று இடம்பெற்றது. மேலும் அந்த பேனரில் இளைஞர்கள் ஆதார் கார்டு வடிவில் தங்களது பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை அச்சிட்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் அந்த பேனர் தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த பேனரை அகற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)