Skip to main content

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா (படங்கள்) 

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (20.12.2021) நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களின் பரிதவிப்பு; ஆளுநரின் அறிவிப்பால் மகிழ்ச்சி

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Pity of 9 lakh students; Happy with Governor's announcement

 

நெல்லையில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. மேலும் சில பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. அதேபோல் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. மற்ற பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. 

 

திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள், வெளிநாடுகளில் மேற்படிப்பிற்காகவும் ஆய்வுப் படிப்பிற்காகவும் செல்லும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது. தற்போது 4 பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.  

 

ஜூன் 16 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்திற்கும், ஜூன் 28 ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும், ஜூன் 19 ஆம் தேதி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஜூலை 7-ஆம் தேதி நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவப் பல்கலைக்கழகத்திற்கும் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

"பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும்" - ஆளுநர் தமிழிசை

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

tamilisai soundararajan request women came into politics

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள சென்றான்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் இரண்டாம் ஆண்டு  பட்டமளிப்பு விழா நேற்று (28.04.2023) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

 

விழாவில் அவர் பேசுகையில், ‘‘பெண்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலம் அரசியல் தூய்மை அடையும். பெண்கள் அரசியலை தனக்கான துறை இல்லை என்று ஒதுங்கி இருக்கக் கூடாது. பெண்கள் அதிக அளவில் சவால்களைச் சந்திக்க மன தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. ஆண்களை விட பெண்கள் தற்போதும் அதிக அளவில் சவால்களைச் சந்தித்து வருகிறார்கள். மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து அரசியல் செய்தால் தான் பிரச்சனை. வெளியே சென்று அரசியல் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று பேசினார்.

 

பட்டமளிப்பு விழாவுக்கு பின்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்த செய்தியாளர்கள், தமிழக ஆளுநர் குறித்தும் ஆளுநர்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவது குறித்தும் கேள்வி எழுப்பிய போது, "தமிழக ஆளுநர் குறித்து கருத்து கூற விரும்பவில்லை. அந்தந்த ஆளுநர்கள் மசோதாக்களில் கையெழுத்திடுவதில் அவர்கள் சட்டத்தை எப்படி கையாளுகின்றனர் என்பதை பொறுத்து காலதாமதமாகிறது" என்று தெரிவித்தார்.