MGR Certificate of Merit Application Stopped in University!

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தகுதிச் சான்றிதலுக்கான கட்டணங்கள் ஒருமைப்படுத்தப்படுவதாலும் மாணவர்கள் விண்ணப்பிக்கிற முறைகள் எளிமைப்படுத்தப்படுவதாலும் தொழில்நுட்ப மாற்றங்களைப் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. சீராய்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனால் தகுதிச் சான்றிதலுக்கான தொழில்நுட்ப நுழைவுகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

Advertisment

தகுதிச் சான்றிதழ் தேவைப்படுகிற மாணவர்கள், சில நாட்கள் பொறுத்திருந்து,பின்னர் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். யாரும் பதைபதைக்க வேண்டாம் என எல்லோருடைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். இந்த நிறுத்தம் தற்காலிகமானது மட்டுமே" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment