Skip to main content

நெல்லையில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா!! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

Published on 20/01/2019 | Edited on 20/01/2019
eps

 

நெல்லையில் இன்று அதிமுகவை தோற்றுவித்தவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 102 பிறந்தநாள் விழா நெல்லையில் இன்று நடந்தது. திருநெல்வேலி டவுன் பகுதியில் வாகையடிமுக்குதிடலில் பெரிய கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்திருந்தனர். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பதால் அவரை வரவேற்று நகர் முழுவதும் கட்டவுட்டுகள் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. மாலை  5 மணி அளவில் நடந்த இந்த விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது,

 

eps

 

அரசின் திட்டங்களையும், மக்கள் நல திட்டங்களை பற்றியும் விரிவாக எடுத்துவைத்தார். மேலும் கோடநாடு சம்பவத்தில் எனக்கு தொடர்பில்லை. அதில் தொடர்புடைய அந்த குற்றவாளிகளின் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. அந்த குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கொடுத்தவர்கள் திமுகவின் மா.சுப்ரமணியத்தின் போட்டோகிராஃரும், இன்னொரு திமுகவின் வட்ட செயலாளரும் அவார்கள். இவர்கள் அந்த குற்றவாளியோடு இருக்கிறார்கள் என்று சொன்னவர் அது தொடர்பான பிரிண்ட் அவுட் படம் ஒன்றையும் காட்டினார். எனவே இதன் பின்னணியில் திமுக உள்ளது என்றார்.

 

இந்த கூட்டத்தில் அதிமுகவினர் திரளாக கலந்துகொண்டனர். மாவட்ட எம்.எல்,ஏக்கள் உட்பட எம்பிக்களும் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்