Published on 01/09/2019 | Edited on 01/09/2019
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கனஅடியில் இருந்து 13,000 கனஅடியாக அதிகரிப்பு. டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக 18,000 கனஅடி வரை உயர்த்தப்படும் என அதிகாரிகள் தகவல்.

கும்பகோணம், மாயவரம் உள்ளிட்ட காவிரி கடைமடை பகுதிகளுக்காக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு பாசனத்திற்காக 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.43 அடியாகவும், நீர் இருப்பு 89.43 டிஎம்சியாக இருக்கிறது.