Skip to main content

நடைபாதையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

திருவெண்ணெய்நல்லூர் பகுதிகளில் மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் மருத்துவமனை மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

medical waste



விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பகுதியில் மற்றும் சரணம் பாக்கம் மணக்குப்பம் பகுதிகளில் நேற்று இரவு வாகனங்களில் ஒவ்வொரு இடங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மூட்டைகளை சாலை ஓரமாக இறக்கி போட்டு விட்டு சென்று விட்டனர். 

இதனால் சாலை ஓரமாக ஊசிகளும் இரத்தக் கழிவுகளும் சிதறிக் கிடப்பதால் அந்த வழியாக செல்லக்கூடிய விவசாயிகள், மாணவ, மாணவிகள் , பொதுமக்கள் என அனைவரும்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் நச்சுத்தன்மை கொண்ட இந்த மருத்துவ கழிவுகள் மூலமும், காற்று மூலமாகவும், மழைநீர் ஈரத்தின் மூலமாகவும் இந்த பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக தலையிட்டு அவற்றை அப்புறப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.  

சார்ந்த செய்திகள்