Medical camp for girls conducted by private doctors

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தனியார் மருத்துவர்களால் பெண் குழந்தைகள் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

Advertisment

சென்னையில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனையில் பணிபுரியும் அபிராமி கிருத்திகா-குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர்.பிரசன்னா குழந்தைகள் கதிரியக்க நிபுணர் மற்றும் APAAR கிளினிக் நந்தனம் டாக்டர். அருள்மொழி மகப்பேறு மருத்துவர்ஆகியோரால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

Advertisment

 Medical camp for girls conducted by private doctors

முகாமையொட்டி, பெரியமேட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கான சேவா சக்கர குழந்தைகள் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை சுகாதார முகாம் நடத்தப்பட்டது. முகாமில் சுமார் 60 பட்டியலினகுழந்தைகளுக்கு பொது குழந்தை மருத்துவம், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை பிரச்சனைகள் மற்றும் மகளிர் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மருந்துகள் மற்றும் இலவச முதலுதவி பெட்டி வழங்கப்பட்டது. பல் சுகாதாரம், குடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றி டாக்டர். அருள்மொழி இளம்பெண்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.