Skip to main content

மாதவரம் தீ விபத்து... 26 தீயணைப்பு வாகனங்கள்,500 தீயணைப்பு வீரர்கள் குவிப்பு! 

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

சென்னை மாதவரம் ரவுண்டான அருகில் உள்ள ஒரு ரசாயன கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் தீவிபத்து தொடர்பாக மாதவரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

MATHAVARAM FIRE ACCIDENT


மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் வைக்கப்படும் இந்த ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்த கிடங்கின் அருகில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளில் தீ பரவியுள்ளது. அந்த பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கண்ணெரிச்சல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்நிலையில் சம்பவ இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த தீயணைப்புதுறை டிஐஜி சைலேந்திரபாபு தெரிவித்ததாவது,

 

MATHAVARAM FIRE ACCIDENT

 

இந்த தீ அருகில் உள்ள கிடங்கு மற்றும் கடைகளுக்கு பரவாத வண்ணம், மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வன்ணம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். வேதியல் பொருளை அணைப்பதற்கான நுரை இருக்கிறது அதை கொண்டுவரும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளோம். உள்ளே  உள்ள வேதியல் ரசாயனம் மருந்து தயாரிப்பதற்கான ரசாயனம் எனவே அதில் விஷத்தன்மை இல்லை எனவே பொதுமக்கள் பயம்கொள்ளவேண்டாம். தற்பொழுவரை 26 தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளது. நுரை கொண்டு தீயணைக்கும் வாகனங்கள் 6 உள்ளது. மேலும் 10 வாகனங்கள் வந்துகொண்டிருக்கிறது. 500 தீயணைப்பு வீரர்கள்  தற்பொழுது பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஷிப்ட்க்கு 500 வீரர்கள் வந்துள்ளனர். பொதுமக்கள் யாரும் பயம்கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; பரமக்குடியில் பரபரப்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
incident in broad daylight; There is excitement in Paramakudi

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றி வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் காவலர் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த டீக்கடையில் மேகலா என்ற பெண் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மேகலா அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக மணிகண்டனை பிடித்த அக்கம்பக்கத்தினர் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

incident in broad daylight; There is excitement in Paramakudi

இது தொடர்பான விசாரணையில் கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த மேகலா அந்தப் பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் மேகலாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேகலா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருதரப்பையும் அழைத்த போலீசார் இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் டீக்கடையில் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த மேகலாவை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

நண்பனின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு; கொடூரமாகக் கொல்லப்பட்ட கணவர்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 youth incident his friend near Ponneri

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான லக்ஷ்மணன். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவருக்கும், மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான விஷ்ணு என்பவருக்கும் சென்னை புழல் நடுவன் சிறையில் இருந்தபோது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு இருவரும் சிறையில் இருந்து வெளியில் வந்த பின்னரும் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில் லட்சுமணனின் மனைவியுடன் விஷ்ணுவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்து பலமுறை இருவரையும் ஏற்கெனவே லட்சுமணன் கண்டித்த நிலையில் நேற்று இரவு லாவகமாக விஷ்ணு லட்சுமணனை தனது சொந்த ஊரான தோட்டக்காடு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த லட்சுமணனை நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணு சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீஞ்சூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் விஷ்ணு உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர். மனைவி உடனான திருமணத்தை மீறிய உறவை தட்டிக் கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை நண்பனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது