Published on 06/07/2020 | Edited on 06/07/2020
![Mask is mandatory to buy fish - Minister Jayakumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/zxyKR_D_E2u1Tke_sQ6JfFbNHJwcYxTHgC-m0fPWx20/1594034189/sites/default/files/inline-images/hj_12.jpg)
மீன் வாங்க வருபவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, மீன் மார்க்கெட்டில் மாஸ்க் அணியாமல் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை. மீன் மார்க்கெட்டில் உள்ளே செல்லவும், வெளியே செல்லவும் தனி வழி அமைக்க வேண்டும். மீன்களை போன்று அழுக கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல இ-பாஸ் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.