Published on 17/07/2020 | Edited on 17/07/2020
![marakkanam police station](http://image.nakkheeran.in/cdn/farfuture/h9tcdVWZKuVmYNJ9XVGaPOb-NBbjEe-omfqttvTqFQw/1594976337/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202020-07-17%20at%208.15.08%20AM%20%281%29_0.jpeg)
மரக்காணம் காவல் நிலையத்தில் கைதி ஒருவருக்குக் கரோனா உறுதியானதால் அங்கு பணியாற்றுபவர்களுக்கும் கரோனோ ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
முதலியார்பேட்டையில் சாராயம் விற்று வந்த ரஜினி என்பவரைக் கைது செய்த காவலர்கள், அவரை திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் அவருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொண்டபோது கரோனா தொற்று உறுதியானது.
அவரை மரக்காணம் காவல் நிலையத்திலிருந்து கார் மூலம் திண்டிவனம் கூட்டிச் சென்ற ஏழுமலைக்கும் தொற்று இருப்பதாகக் காவலர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதனால் காவல் நிலையத்தில் உள்ள அனைத்துக் காவலர்களும் விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே மனஅழுத்தமும் கவலையும் இருக்கும் நிலையில், கரோனா அச்சமும் இப்போது சேர்ந்துவிட்டதாகக் காவலர்கள் புலம்பி வருகிறார்கள்.