Skip to main content

''திமுக ஆட்சியில்தான் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டது'-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

nn

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு, மதுரை மற்றும் திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கங்கள் இணைந்து நடத்திய 30 வயதிற்கு மேற்பட்ட மகளிருக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் துவக்க விழாவிற்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை தாங்கினார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் தலைமை தாங்கினார்.

 

இவ்விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். நிகழ்வின் மேடையில் ஐ.பெரியசாமி பேசும்போது, ''வேடசந்தூரில் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவ சங்கங்களின் சார்பில் நடத்தப்படும் 30 வயதிற்கு மேற்பட்ட மகளிர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாமிற்கு பல்லாயிரக்கணக்கான மகளிர்கள்  பரிசோதனை மேற்கொள்ள வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில்  அண்ணா.எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா என எத்தனையோ முதல்வர் இருந்திருக்கிறார்கள். ஆனால்  கலைஞர் ஆட்சியில் தான் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் இதய நோய் மற்றும் பல்வேறு உயிர் காக்கும் நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு அதிக மான உயிர்கள் காப்பாற்றப்பட்டது.  கிராமப் பகுதியில் உள்ள தாய்மார்கள் குறிப்பாக 30 வயதிற்கு மேற்பட்ட மகளிர்கள் மருத்துவரிடம் சென்று மருத்துவ முன் பரிசோதனைகள் செய்வதை  தவிர்த்து வருகிறார்கள். நோய்களின் அறிகுறிகளை முன்பே கண்டறிந்து அவைகளை சரி செய்வது சுலபமாகும்.

 

பெண்களுக்கு முக்கியமாக கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் உள்ளது. இவைகளை முன்கூட்டியே அறிந்தால் நூறு சதவீதம் குணப்படு தரக்கூடியதாகும்  உடலுக்கு வெளி யில் உள்ள நோய்களை நம்மால் கண்டறிய இயலும், உடலுக்குள் வரும் ஒரு புள்ளியை நாம் கண்டறிவது கடினம். இதுபோன்ற மருத்துவ முகாமில் பங்கேற்று முன் பரிசோதனை செய்யும் பொழுது அவைகளை கண்டறிந்து அதை சீர் செய்வது சுலபமான ஒன்றாகும். அதேபோல் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பது என்பது முக்கியமானதாகும். மருத்துவரிடம் சென்றால் அவை நமக்கு நல்லபடியாக குணமாகும் என்பது நம்பிக்கை வைக்க வேண்டும். முன்கூட்டியே இவைகளை அறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் விலை மதிப்புமிக்க உயிர்களை பாதுகாத்து அவர்கள் சுகமாக வாழ முடியும்.

 

முதலமைச்சர்  மருத்துவத்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிலேயே முதல் முறையாக ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 750 கோடி மதிப்பிலான 5465 புதிய வகுப்பறைகளை கட்ட முதல்வர்  நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கூட்டுறவுத் துறையில் இருந்தபோது பல்வேறு மருந்துகள் 20 சதவீதம் வரை குறைந்த விலையில் தரமான மருந்துகள் விற்கப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் தேவையை நிறைவேற்றி வரும் முதல்வருக்கு நீங்கள் அனைவரும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்