நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளர் மன்சூர் அலிகான் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர்,
நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி மக்களிடம் சென்று சேர்ந்திருந்தது. ஆனால் அந்த சின்னம் பறிக்கப்பட்டு தற்போது கரும்பு விவசாயி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு கொடுப்பட்டுள்ள வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள கரும்பு விவசாயி சின்னம் வாக்கு மெஷினில் சிறியதாக கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மங்கலாக அச்சிடப்பட்டுள்ளது எனக்கூறினார்.
வாக்கு சேகரிப்புக்கு சென்ற இடத்தில் மக்கள் கொண்டுவந்த உணவை வாங்கி உண்டார் அப்போது அவருடன் பிரச்சார வாகனத்தில் இருந்த ஒருவர் திமுக அதிமுககாரர்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட சொன்னால் அவர்களை முகத்தில் குத்துங்கள் என திட்ட மன்சூர் அலிகானோ எதிர் வேட்பாளர்களை இப்படியெல்லாம் திட்டக்கூடாது மரியாதையை கொடுத்து பேச வேண்டும் என கூறினார்.
அதன்பின் பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் சாலையோரம் இருந்த நுங்கு கடையில் நுங்கு சாப்பிட்டார் மன்சூர்.