Skip to main content

தேர்தல் நன்றாக நடக்கிறது ஆனால் நாட்டில்தான் தண்ணி இல்லை... மன்சூர் அலிகான்!

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிப்பு பிறகு நடிகர் மன்சூரலிகான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

தேர்தல் நன்றாக நடக்கிறது. நாட்டில் தண்ணி இல்லை. தபால் ஓட்டுக்கள் கொஞ்சம் முன்னாடியே அனுப்பப்பட்டிருக்க வேண்டும் திடீரென்று அனுப்பப்பட்டு இருக்கிறது. இரண்டு நாட்கள் வந்து சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆதரவு யாருக்கு என்று சொல்ல மாட்டேன். பொதுவாக பாக்யராஜ் என்பவர் மூத்தவர், நல்ல கலைஞர், சிறந்த திரைக்கதை எழுத்தாளர், சிறந்த நிர்வாகி.

mansur ali khan interview


இன்று மாலையே அனைவருக்குள்ளும் ஒற்றுமை வந்துவிடும்.  வாக்குப்பதிவு முடிந்த உடனே எங்கேயோ கொண்டு போய் வைத்து விடுவார்களாம் இரண்டு மாதத்திற்கு. மோடி சொல்லிக் கொடுத்துவிட்டார். டிஜிட்டல் இந்தியா இரண்டு மாதம் கழித்து தான் தீர்ப்பு சொல்ல வேண்டும், இந்த எலெக்சனிலாவது மோசடி நடக்காது என்று நம்புவோம்.

சங்க கட்டிடத்தை ஒரு கட்டடமாக நான் பார்க்கவில்லை. இது ஒரு கோயில்,  விஷால் மட்டும் தான் கட்டனும் என்றெல்லாம் இல்லை இதில் எல்லா கலைஞர்களின் பங்களிப்பும் இருக்கும் இருக்கவேண்டும். அரசியலில் வேறு வேறுபாடுகள், நிலைபாடுகள் இருக்கலாம் ஆனால்  கலைஞர்கள் ஒரு தாய்க்கு  நான்கு குழந்தைகள் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம். அதேபோல் தான் எங்களது எம்பலமே இருக்கிறது. அப்படி இருக்கையில் இதை நடிகர் சங்க கட்டடமாக பார்க்கக் கூடாது. கடன் வாங்கக்கூடாது. எல்லா கலைஞர்களிடமும் மடிப் பிச்சை எடுத்து கட்டும் கோயிலாக கருத வேண்டும். என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். இதில் அரசியல் தலையீடு இருப்பது போன்று எனக்கு ஒன்றும் தெரியவில்லை.

எல்லாம் யாகம் வளர்ப்பதை பார்த்தால் சிரிப்பா வருது. எல்லாம் காமெடியன் மாதிரி மாலை போட்டுக்கொண்டு உக்காந்துகிட்டு  இருக்காங்க(அமைச்சர்கள்). அவங்களை பார்த்து வருகிற மழையும் ஓடிப்போய்விடும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'உயர்வாகத்தான் பேசினேன்'-நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம்  

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

actor Mansoor Ali Khan explains

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இதனிடையே, இப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இதற்கு நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னை பற்றி கேவலமாக பேசிய ஒரு வீடியோ எனது கவனத்திற்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும், இது பாலியல் அவமரியாதை, பெண்வெறுப்பு மற்றும் அவரது மோசமான மனநிலையை நான் காண்கிறேன். அவருடன் அந்த படத்தில் சேர்ந்து நடிக்காததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இனிமேலும், இது போன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இவர் போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் குரல்கள் எழுந்து வருகிறது. நடிகை குஷ்பு ஆகியோர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷாவை பற்றி உயர்வாகத்தான் பேசினேன் என நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் 'நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர். நடிகை திரிஷாவை பற்றி உயர்வாகத்தான் பேசினேன்' என தெரிவித்துள்ளார்.

 

Next Story

"தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் சொல்லவில்லை!" - மன்சூர் அலிகான் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனு!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

 Actor Mansoor Ali Khan seeks re-bail

 

நடிகர் விவேக் உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் விவேக் மரணத்துக்கு காரணம் என்று சிலர் சந்தேகம் எழுப்ப, அவர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று மருத்துவர்கள் விளக்கியிருந்தார்கள். இந்நிலையில், விவேக் தடுப்பூசி போட்டது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

 

இதற்கிடையே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார். அதன்படி கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் அளித்த புகாரின் பேரில், வடபழனி போலீசார் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே முன் ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் 19.04.2021 தேதியன்று  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த மனு கடந்த 21 ஆம் தேதி முதன்மை நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெய்சங்கர், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

 

இதையடுத்து, மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை எனக் கூறி, புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் தன் மீது வடபழனி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி மீண்டும் நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.