Skip to main content

மணிப்பூர் சம்பவம்; அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் 

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மத்தியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக் கண்டித்துப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஒருங்கிணைந்தார்கள். அப்போது காவல்துறையினர் அனுமதி இல்லை என்றதால், அவர்கள் பூமா கோவில் அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அந்தப் போராட்டத்தில், மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்தும், ஒன்றிய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், மணிப்பூர் சம்பவத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மணிப்பூர் பழங்குடி இன மக்களுக்கு நீதி வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்கள்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

45 நிமிடங்கள் வெடித்து சிதறிய துப்பாக்கி குண்டுகள்! மணிப்பூரில் சோகம்!

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

21 year young man passes away in manipur
கோப்புப் படம் 

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. 

 

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். பல மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன. 

 

இந்த நிலையில் இன்று (25ம் தேதி) காலை மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஜூபி எனும் பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 21 வயது இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். 

 

இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள், மெய்தீய் மக்கள் அதிகம் வாழும் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் 8 கி.மீ. தொலைவில் உள்ள குக்கி இன மக்கள் அதிகம் வாழும் காங்போக்பி மாவட்டத்தின் ஜூபி எனும் பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. அதிகாலை சுமார் 2.45 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச் சூடு அதிகாலை 3.30 வரை நடந்துள்ளது. சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர். 

 

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் துவங்கிய கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் அசம்பாவிதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதில் பொதுமக்கள் பரிதாபமாக பலியாகிக் கொண்டே இருக்கின்றனர். 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நட்சத்திர அந்தஸ்து

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

 Star status for Annamalai University

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2022-23 கல்வியாண்டில் புதுமை கண்டுபிடிப்பு, கவுன்சிலிங் செயல்பாடுகளுக்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் கல்வித்துறை (3.5) நட்சத்திர மதிப்பீட்டை, 70.81 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

 

இது முந்தைய ஆண்டு பெற்ற (0.5) நட்சத்திர மதிப்பீட்டில் இருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் இந்த மதிப்பெண்ணை எட்டுவது இதுவே முதல்முறை.  இதன்படி தமிழ்நாட்டின் 2வது அதிக புதுமை கண்டுபிடிப்பு செயல்திறன் மிக்க அரசு பல்கலைக்கழகமாக மாறி உள்ளது.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் தலைமையில் ஐஐசி அமைப்பு புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இது அமைந்துள்ளது. ஆராய்ச்சி அறிஞர்கள் மாணவர்களிடையே புதுமையான ஆராய்ச்சி சிந்தனை, தொழில் முனைவு, திறன்களை வளர்க்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட ஐஐசியின் செயல்பாடுகள் அதிகரித்தன.

 

மேலும் சிதம்பரம் பகுதியில் பள்ளிகளின் அடல் ஆய்வகங்களின் ஒருங்கிணைப்பு மூலம் சேவைகளை விரிவுபடுத்துகிறது. இந்த முயற்சியானது தமிழகம் முழுவதும் புதிய முயற்சி, தொழில் முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சாதனை படைத்த ஐஐசி குழு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்களுக்கு துணைவேந்தர் ராம.கதிரேசன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்