
கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதியில் அமைந்துள்ள மங்களூருவில் கடந்த 19/11/2022 அன்று மாலை ஒரு ஆட்டோ திடீரென வெடித்துச் சிதறியது. ஆட்டோவில் இருந்த இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடித்தது குக்கர் வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதில் தேசிய அளவிலான சதி இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில்,கர்நாடக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை எனும் என்.ஐ.ஏ விசாரணை வேண்டும் என இன்று கர்நாடக அரசின் சார்பில் மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ விசாரணைக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் இந்த வழக்கு முழுவதுமாக என்.ஐ.ஏ வசம் சென்றுள்ளது. அதேநேரம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் குற்றவாளியான முகமது ஷெரீக் என்பவருக்கு உதகையை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தர் என்பவர் சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் இரண்டாவது நாளாக உடற்கல்வி ஆசிரியர் சுரேந்தரிடம் மங்களூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)