சிதம்பரம் அருகே குமராட்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர்கள் தேவநாதன்(48), ஜெயராமன் (45) குமராட்சி காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 ந்தேதி நள்ளிரவு 1 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கடலூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தியுள்ளனர். மர்ம நபர் தனது கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் காவலர்களை கையில் கிழித்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அறிந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் வாகனத்தை துரத்திச் சென்றனர். அப்போது வழியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து அந்த நபர் தப்பி செல்ல குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அவரது கையில் முறிவு ஏற்பட்டது. இதனைப் பார்த்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் பாண்டிச்சேரி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன்(45) என்பது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் கத்தி எப்படி வந்தது என்பது குறித்தும் எதற்காக இப்படி நடந்துகொண்டார். வேறு ஏதேனும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து பல்வேறு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.