Man arrested for trying to seduce a bike rider

பைக் வீராங்கனையைப் பின் தொடர்ந்து, தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சென்னை, ஆதம்பாக்கத்தில் கடந்த மே 10- ஆம் தேதி அன்று பணி முடிந்து வீடு திரும்பிய பைக் வீராங்கனையிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தவறாக நடக்க முயற்சித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்மந்தப்பட்ட பகுதிக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்தகண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் புளியந்தோப்பைச் சேர்ந்த சந்திரஹாசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் பைக் டாக்சியில் பணியாற்றும் அவர், இரவில் தனியாக செல்லும் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிய வந்தது.