Skip to main content

நூதன முறையில் மதுபாட்டில்களை கடத்தியவர் கைது!

Published on 16/02/2025 | Edited on 16/02/2025

 

Man arrested for liquor bottles in an innovative way

உடல் முழுவதும் டேப் ஒட்டி 120 மது பாட்டில்களைக் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடந்துசென்றவரை விசாரித்தனர். அப்போது, அவர் விழுப்புரத்தைச் சேர்ந்த நாகமணி என்பதும், அவர் மீது பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நாகமணியை விழுப்புரம் மதுவிலக்கு காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களை வாங்கி தன் உடம்பு முழுவதும் டேப் போட்டு ஒட்டிக்கொண்டு பேருந்து மூலமாக நாகமணி பயணம் செய்து விழுப்புரத்துக்கு வந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது உடலில் கை, கால்கள், மார்பு, பின்புற தோள்பட்டை என உடல் முழுவதும் நூதனமாக ஒட்டி நாகமணி எடுத்துவந்த 120 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து கைது செய்தனர். 

சார்ந்த செய்திகள்