Skip to main content

திருச்சியில் நடைபெற்ற மக்கள் சக்தி இயக்கத்தின் சக பயணிகள் சங்கமம் கூட்டம்

Published on 10/04/2023 | Edited on 10/04/2023

 

makkal shakthi movement meeting held trichy

 

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவிலான சக பயணிகளின் சங்கமம் கூட்டம் திருச்சியில் நேற்று (09.04.2023) மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. அதில், மாநிலத் தலைவர் டாக்டர் த.ராசலிங்கம், மாநில துணைத் தலைவர் ஈரோடு கோவிந்தராஜ், சென்னை ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் திருச்சி கே.சி. நீலமேகம் வரவேற்றார்.

 

நிகழ்ச்சியில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக 1993 முதல் பாத யாத்திரை, பொதுக்கூட்டம், கையெழுத்து இயக்கம் போன்ற விழிப்புணர்வுகளை மக்களிடம், அரசாங்கத்திடம் எடுத்துரைத்த டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்திக்கும், அதனைத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்து வெற்றி கண்ட கொங்கு மண்டல விவசாய சங்கம், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகளையும் மக்கள் சக்தி இயக்கம் பாராட்டுகிறது. தமிழக அரசு உடனே மக்களை பாதிக்கும் மது விற்பனை நேரத்தை மாலை 2 மணி முதல் 6 மணி வரை நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, விரைந்து விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

நிகழ்விற்கு  திருச்சி  விருந்தோம்பல், சுற்றுலா அமைப்பு, நிர்வாகத் தலைவர் மு.பொன்னிளங்கோ, ஈரோடு சிவக்குமார், அத்தானி சீனிவாசன், மதுரை சந்திரசேகரன், தல்லாகுளம் முருகன், கோவை எஸ்.கே.பாபு, ஞானவேல், தஞ்சாவூர் முருகானந்தம், கரூர் சுகுமார், சதானந்தம், பாண்டிச்சேரி சுதாகர்,  சென்னை ஜெகதீசன், லட்சுமி நாராயணன், திருச்சி சண்முகசுந்தரம், விஜயகுமார், ஆர்.கே.ராஜா, விஜயகுமார், முருகதாஸ், இளங்கோ, குமரன், பெரம்பலூர் சிவக்குமார், தூத்துக்குடி கந்தசாமி, பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Notification of date for consultative meeting of 'India' alliance
கோப்புப்படம்

2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அதில்,  பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதே சமயம் தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், இந்த சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பெருமளவு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் முதன் முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், மிசோரம் மாநிலத்தில் மிஸோரம் மக்கள் இயக்கம் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளின் 4 வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; பரிதாபமாக பலியான இருவர்! 

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
A car overturned in a 50-foot ditch! Two  passes away

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம் போட்டையில் இருந்து சமயபுரம் நோக்கிச் செல்லும், திருச்சி - சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில்,  கொள்ளிடம் ஆற்றின் பாலத்தை வேகமாக கடக்க முயன்ற கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் தடுப்புக்கட்டையை உடைத்துக்கொண்டு 50 அடி கீழே ஆற்றுக்குள்ளே பாய்ந்து, தலைகீழாக கவிழ்ந்து, சுக்குநூறாக சேதமடைந்தது.

கேரளா மாநில பதிவு எண் கொண்ட அந்த சைலோ காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த காரில் பயணம் செய்த ஆண்,பெண் இருவரும் கணவன் மனைவியாக இருக்கக்கூடும் என போலீசார் அனுமானித்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலீசாரும், ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்புத் துறையினரும், ரோப் கிரெயின் வாகனத்தின் உதவியுடன் காரையும், இறந்தவர்களின் உடல்களையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டெடுத்தனர்.

இந்த விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணிநேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிக்கிய காரில் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில், திருச்சி விமான நிலைத்திற்கு வந்திறங்கிய, கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கு சொந்தமான உடைமைகள் என்பது தெரியவந்தது. அதில் விமான நிலைய சீல்களும் இருந்தன. 

அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் பலியானவர் ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவியாக இருக்கக்கூடும் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் வந்து விபத்து குறித்து  ஆய்வு மேற்கொண்டார்.