makkal shakthi movement meeting held trichy

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில அளவிலானசக பயணிகளின் சங்கமம் கூட்டம் திருச்சியில்நேற்று (09.04.2023) மக்கள் சக்தி இயக்க மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. அதில்,மாநிலத்தலைவர் டாக்டர் த.ராசலிங்கம், மாநில துணைத் தலைவர் ஈரோடு கோவிந்தராஜ், சென்னை ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் திருச்சி கே.சி. நீலமேகம் வரவேற்றார்.

Advertisment

நிகழ்ச்சியில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக 1993 முதல் பாத யாத்திரை, பொதுக்கூட்டம், கையெழுத்து இயக்கம்போன்ற விழிப்புணர்வுகளை மக்களிடம், அரசாங்கத்திடம் எடுத்துரைத்த டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்திக்கும், அதனைத்தொடர்ந்து குரல் கொடுத்து வந்துவெற்றி கண்ட கொங்கு மண்டல விவசாய சங்கம், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகளையும்மக்கள் சக்தி இயக்கம் பாராட்டுகிறது. தமிழக அரசு உடனே மக்களை பாதிக்கும் மது விற்பனை நேரத்தை மாலை 2 மணி முதல் 6 மணி வரை நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி, விரைந்து விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது என மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

நிகழ்விற்கு திருச்சி விருந்தோம்பல், சுற்றுலா அமைப்பு, நிர்வாகத் தலைவர் மு.பொன்னிளங்கோ, ஈரோடு சிவக்குமார், அத்தானி சீனிவாசன், மதுரை சந்திரசேகரன், தல்லாகுளம் முருகன், கோவை எஸ்.கே.பாபு, ஞானவேல், தஞ்சாவூர் முருகானந்தம், கரூர் சுகுமார், சதானந்தம், பாண்டிச்சேரி சுதாகர், சென்னை ஜெகதீசன், லட்சுமி நாராயணன், திருச்சி சண்முகசுந்தரம், விஜயகுமார், ஆர்.கே.ராஜா, விஜயகுமார், முருகதாஸ், இளங்கோ, குமரன், பெரம்பலூர் சிவக்குமார், தூத்துக்குடி கந்தசாமி, பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.