Skip to main content

கமல்ஹாசன் போட்டியில்லை-ம.நீ.ம வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Published on 24/03/2019 | Edited on 24/03/2019

கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய  கமல்ஹாசன் வேட்பாளர்கள் பெயரை அறிவித்தார்.

 

kamal

திருவண்ணாமலை அருண்   

 ஆரணி-ஷாஜி 

நாமக்கல் - தங்கவேல்

ஈரோடு -சரவணகுமார் 

ராமநாதபுரம்- விஜயபாஸ்கர்

 கரூர்- டாக்டர் ஹரிஹரன்

பெரம்பலூர் -அருள்பிரகாசம் 

தஞ்சாவூர்- ராமதாஸ் 

 சிவகங்கை- சினேகன்

மதுரை-அழகர் 

தென்சென்னை-ரங்கராஜன் 

கடலூர்- அண்ணாமலை 

விருதுநகர் -வி முனியசாமி

 

தென்காசி -முனீஸ்வரன்.கே

  திருப்பூர் -வி எஸ் சந்திரகுமார்

 பொள்ளாச்சி -மூகாம்பிகை 

கோயம்புத்தூர் -டாக்டர் ஆர் மகேந்திரன்

 

 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் 

பூந்தமல்லி- பூவை ஜெகதீஷ் 

பெரம்பூர் பிரியதர்ஷினி 

 திருப்போரூர்- கருணாகரன் 

சோளிங்கர் -மலைராஜன் 

குடியாத்தம் -வெங்கடேசன் 

ஆம்பூர் -நந்தகோபால் 

 ஓசூர் -ஜெயபால் 

பாப்பிரெட்டிபட்டி -எம் நல்லதம்பி 

கரூர் -குப்புசாமி கரூர் 

 நிலக்கோட்டை - சின்னதுரை 

திருவாரூர் -அருண் சிதம்பரம்

 தஞ்சாவூர் -துரையரசன் 

மானாமதுரை -எம் ராமகிருஷ்ணன்

 ஆண்டிபட்டி -தங்கவேல் 

 பெரியகுளம்- பிரபு 

சாத்தூர் என்.சுந்தரராஜ் 

பரமக்குடி -உக்கிரபாண்டியன் 

விளாத்திகுளம் -நடராஜன் 

ஸ்ரீபெரும்புதூர் -வழக்கறிஞர் ஸ்ரீதர்

 

kamal

பெயர்களை அறிவித்த பின் பேசிய கமலஹாசன், இந்த பட்டியலில் கமலஹாசனின் பெயர் இல்லை. எனக்கு வந்த விண்ணப்பங்களில் பல ஊர்களின் இருந்து என் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை இவர்கள் எல்லாமே என் முகங்கள் தான்.

 

பல்லாக்கில் ஏறி அமர்வதை விட இந்த பல்லாக்குசுமப்பதில் நான் பெருமை அடைகிறேன். ஊர் ஊராக இந்த பல்லக்கைத் தூக்கிச் சுமந்து கொண்டு உங்களுக்கு இவர்களின் பெருமை சொல்வேன். அதற்கு எனக்கு நேரம் வேண்டும் அதனால் என்னுடைய இலக்கு ஏதோ அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் எனக் கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அதிமுக இணையாமல் வெற்றி சாத்தியமில்லை' - ஓபிஎஸ் பேட்டி

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
'Victory is not possible without ADMK alliance'-OPS interview

அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி சாத்தியமில்லை என  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், 'விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு இலைகளுடன் கூடிய மாங்கனி இருக்கிறது என வலியுறுத்திச் சொல்லி இருக்கிறேன். அதுதான் விக்கிரவாண்டியில் வெற்றி பெறப் போகிறது. அதிமுக என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதாவும் தொண்டர்களை வைத்து இதை மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்கள். உறுதியாக ஒரு தொண்டன் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்யாவிட்டால் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஓபிஎஸ் ஒருபோதும் அதிமுகவிற்கு உண்மையாக இருந்தது கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, ''நேற்று இதுகுறித்து நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறேன். இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் கட்சியின் நலன் கருதிப் பேசாமல் இருக்கிறேன். அவரைப்போல நான் தெனாவெட்டாகவோ, சர்வாதிகாரமாகவோ பேச மாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையில் கட்சி இணைப்பதுதான் ஒரே வழி. நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்குப் பின்னர் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சி இணையாமல் சாத்தியமில்லை'' என்றார்.

Next Story

'நான் எங்கேயும் இப்படிப் பார்த்ததில்லை' - பானிபூரி வேட்டையில் அதிகாரி ஷாக்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 'I have never seen anything like this anywhere'- Officer Shock on panipuri hunt

அண்மையில் பஞ்சுமிட்டாயில் இடம்பெற்றுள்ள செயற்கை நிறமி புற்றுநோயை உருவாக்கும் கூறுகளைக் கொண்டது எனக் கண்டறியப்பட்ட நிலையில் அவை தடை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் செயற்கை நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழகத்திலும் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் சோதனையைத் தீவிரப்படுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் செட்டி வீதி பகுதியில் உள்ள 'ஸ்ரீபகவதி அம்மன் பானி பூரி' கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தமாகவும் சில்லறையாகவும் பானிபூரி விற்பனை செய்யும் கடையில் நடந்த ஆய்வில் அதிகாரிகளுக்கு பல்வேறு அதிர்ச்சிகள் காத்திருந்தது.

 'I have never seen anything like this anywhere'- Officer Shock on panipuri hunt

கடையின் உள்ளே ஒரு பகுதியின் மூலையில் பானி பூரி கீழே தரைதளத்தில் கொட்டி வைக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் கிடந்தது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. 'ஏங்க இப்படியா பானிபூரிய கீழ கொட்டி வைப்பீங்க? உங்களுக்கே நல்லா இருக்கா இதெல்லாம். சாப்பிடற பொருள் இப்படி கீழ தரையில் கொட்டி வச்சிருக்கீங்க. இதை அப்படியே எடுத்து கவரில் போட்டு கொடுத்து விட வேண்டியதுதானா? அட்லீஸ்ட் ஒரு ட்ரம் அல்லது பாலிதீன் கவருக்குள் போட்டு வைக்க வேண்டாமா?' என அதிகாரி கேள்விகளை எழுப்பினார். ''உடனே இதெல்லாம் சீஸ் பண்ணுங்க? எங்கேயுமே இப்படி பார்க்கலப்பா இப்படி கீழே கொட்டி வச்சிருக்கீங்க. நான் இதை விட சின்னதா பானி பூரி செய்ற இடத்தில் கூட ஆய்வு செய்யப் போயிருக்கேன். அவர்கள் கூட கீழே போட்டது கிடையாது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தும் எண்ணெய்யை ஆய்வு செய்த அதிகாரி 'ஆயில பார்த்தாவே தெரியுது எத்தனை தடவை இதை யூஸ் பண்ணிருப்பீங்க. நீங்களே பாருங்க இந்த ஆயில் எப்படி இருக்குன்னு. ஒரு முறை அல்லது இரண்டு முறை தான் ஆயில பயன்படுத்த வேண்டும். தேவையான அளவு ஆயில் பயன்படுத்தி விட்டு பின்னர் அதனை அழித்துவிட வேண்டும் என்று எச்சரித்தார்.