சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில் 'தான் ஓடி ஒளியவில்லை இன்று சென்னை திரும்பியவுடன் இதுகுறித்து உரிய விளக்கம் அளிப்பேன்' என வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார். மகாவிஷ்ணு நடத்திய சொற்பொழிவு விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் சென்னை போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து அடையாறு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 'என்னுடைய ஏரியாவில் என்னுடைய ஆசிரியரையே பேசிவிட்டுச் சென்றிருக்கிறார் அவரை சும்மா விடமாட்டேன்' என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்த நிலையில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவருடைய ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.