Skip to main content

மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா; அமைச்சர், ஆட்சியர் பங்கேற்பு

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 Magalir urimai thogai - Minister - Collector

 

அறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ஒரு கோடிக்கு மேற்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை திட்ட விழாவை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பி உட்பட மக்கள் பிரதிநிதிகள் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழாவை துவக்கி வைத்துள்ளனர்.

 

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் மூரார்பாளையம் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மகத்தான திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சரவண்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு வருகை புரிந்து குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

 


 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

foul language to passengers; Cancellation of license of private bus driver operator

 

கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.

 

அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஆவின் இனிப்பு, காரத்தில் முறைகேடு; ஒற்றை ஆளாக புகார் கொடுத்த விவசாயி

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Aavin's sweet, salty abuse; Farmer who complained as a single person

 

ஆவினில் இனிப்பு கார வகைகள் செய்வதில் 12 லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

 

ஈரோடு ஆவின் நிறுவனத்தில் கடந்த 2021 ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு கார வகைகள் செய்ய வழங்கப்பட்ட உத்தரவில் 12 லட்சம் முறைகேடு எழுந்தது. மேலும், 2500 கிலோ நெய் ஆவினில் எடுக்கப்பட்டு வெளியே விற்பனை செய்யப்பட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுப்பிரமணி என்கிற விவசாயி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் மேலாளர் சபரிராஜன், மோகன்குமார், கோவை ஆவின் பொது மேலாளர் பாலபூபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.

 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்