Published on 01/11/2019 | Edited on 01/11/2019
மதுரை மேலூரை அடுத்துள்ள கீழப்பட்டியைச் சேர்ந்த 26 வயதே ஆன மோகன், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியைக் கடந்த 2015- ஆம் ஆண்டில் பாலியல் தொந்தரவு செய்தார். இதுகுறித்து மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மோகனைக் கைது செய்தனர்.

இவ்வழக்கு, மதுரை மாவட்ட மகளிர் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் உமாராணி ஆஜரானார். முடிவில், மோகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி புளோரா.