Madurai flyover accident ... Investigation report filed!

மதுரை நத்தம் சாலையில் மதுரை - செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி ஒரு தூணில் இருந்து மற்றொரு தூணை இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.

Advertisment

இந்த விபத்தில், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் (45) என்ற தொழிலாளி உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவந்தது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக திருச்சி என்.ஐ.டி. மற்றும் நெடுஞ்சாலை குழுவினர் விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். பளுதூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.