Skip to main content

தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு 

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Madras High Court gives important order to DGP of tamilnadu

 

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை மேற்கொள்வதைத் தவிர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு மற்றும் சிறார்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிபதி ஆனந்த் மோகன் மற்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர் ஒருவர், 18 வயதுக்கு உட்பட்ட மாணவி ஒருவருக்கு மஞ்சள் கயிறு கட்டியது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இருவர் மீதும் தவறு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

 

அதனைத் தொடர்ந்து தருமபுரியில் இளம் வயது திருமணம் குறித்த வழக்கில் இளம் வயது திருமணம் செய்தவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தொடர்புடைய வழக்கை சிறார் நீதிமன்றம் மூலம் அணுக வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தமிழக டிஜிபிக்கு வழங்கியுள்ள அறிவுரையில் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையை மேற்கொள்வதைத் தவிர்க்க காவல்துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்